அம்மா சென்டிமென்ட்.. பதவியேற்பின்போது 2 பைபிள்களை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியது ஏன்? சுவாரசியம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47 வது அதிபராக 2வது முறை டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். அப்போது அவர் 2 பைபிள்களின் மீது கையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இதன் பின்னணியில் அம்மா சென்டிமெண்ட் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்வானார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் நேற்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடந்த விழாவில் பொறுப்பேற்று கொண்டனர்.

அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்றார். அதேவேளையில் ஜேடி வான்ஸ் முதல் முறையாக அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தான் நேற்றைய பதவியேற்பு விழாவில் நடந்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது 2 பைபிளை பயன்படுத்தினார். 2 பைபிள்களின் மீது டொனால்ட் டிரம்ப் தனது ஒரு கையை வைத்து சத்தியபிரமாணம் செய்தார். இன்னொரு கையை ஆதரவாளர்கள் நோக்கி உயர்த்தி பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய இந்த பைபிள்களின் பின்னணி பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்பவர்கள் பைபிள் மீது சத்தியம் செய்து அதிபராக பொறுப்பேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது கட்டாயம் இல்லை என்றாலும் சென்டிமெண்ட்டாக அவர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தான் நேற்று டொனால்ட் டிரம்பும் 2 பைபிள்களை பதவியேற்புக்கு பயன்படுத்தினார். இதில் ஒரு பைபிள் என்பது மறைந்த முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளாகும். இன்னொரு பைபிள் என்பது டொனால்ட் டிரம்புக்கு அவரது தாய் மேரி ஆன் மேக்லியோட் டிரம்ப் பரிசாக வழங்கிய பைபிளாகும்.
இந்த பைபிள் என்பது கடந்த 1955ம் ஆண்டில் டொனால்ட் டிரம்பிடம் அவரது தாய் பரிசாக வழங்கினார். அமெரிக்காவின் ஜமைக்காவில் உள்ள முதல் பிரஸ்பைடிரியன் சர்ச்சில் சண்டே சர்ச் பிரைமரி பள்ளியின் பட்டமளிப்பு விழாவின்போது டொனால்ட் டிரம்பிடம் அந்த பைபிளை அவரது தாய் வழங்கி இருந்தார். தாயின் நினைவாக இப்போது டொனால்ட் டிரம்ப் அந்த பைபிள் மீது சத்தியபிரமாணம் செய்து அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பைபிளின் கீழ் புறத்தில் டொனால்ட் டிரம்ப் பெயர் எழுதப்பட்டு உள்ளது. பைபிளின் உள்புறம் சர்ச் நிர்வாகிகளின் கையெழுத்துகள் மற்றும் பிற விபரங்கள் என்பது இடம்பெற்றுள்ளது.
அதோடு ஆபிரகாம் லிங்கன் பைபிளை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2017 ம் ஆண்டில் அவர் முதல் முறையாக அமெரிக்க அதிபரானபோது அந்த பைபிளை பயன்படுத்தினார். அதற்கு முன்பு பராக் ஒபாமாவும், ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி 2 முறை பதவியேற்றார். பராக் ஒபாமா, ஆபிரகாம் லிங்கன் பைபிள் மட்டுமின்ற மார்ட்டின் லூதர் கிங்கின் பயன்படுத்தி இருந்தார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர்கள் பைபிள் வைத்து பொறுப்பேற்கும் நடைமுறை என்பது கடந்த 1789ம் ஆண்டு முதல் முதலாக தொடங்கியது. அதாவது அமெரிக்காவின் அதிபராக முதல் முதலாக பொறுப்பேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் தான் இந்த நடைமுறையை தொடங்கினர். அவர் அதிபராக பொறுப்பேற்கும்போது விழா ஏற்பாட்டாளர்கள் பைபிள் கொண்டு வர மறந்துவிட்டனர். இதையடுத்து அருகே இருந்த மாசோனிக் லாட்ஜில் இருந்து பைபிள் கடனாக வாங்கி வரப்பட்டது. அதன்பிறகு அந்த பைபிளை பயன்படுத்தி ஜார்ஜ் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்டர், டுவைட் டி. ஐசனோவர், வாரன் ஜி ஹார்டிங், ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் உள்ளிட்டவர்களும் பைபிளை பயன்படுத்தி பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். அதேபோல் நேற்று டொனால்ட் டிரம்புடன் துணை அதிபராக இந்தியாவின் மருமகன் ஜேடி வான்ஸ் பதவியேற்றார். அவர் தனது பாட்டி போனி கடந்த 2003ம் ஆண்டில் வழங்கிய பைபிள் மீது சத்தியம் செய்து துணை அதிபராக பொறுப்பேற்று கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications