“என்னுடை டீம் லீட் இந்தியர்தான்! ஆனால்..” அமெரிக்க சாப்ட்வேர் என்ஜினியரின் பேச்சால் வெடித்த விவாதம்!
வாஷிங்டன்: இந்திய பணியாளர்கள் குறித்து, வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. இந்நிலையில் தனது இந்திய மேலதிகாரி குறித்து அமெரிக்க சாப்ட்வேர் என்ஜினியர் பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சமீப காலமாக, இந்திய பணியாளர்கள் குறித்து அமெரிக்காவில் பேசப்படும் கருத்துக்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதற்கு காரணம், அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு அமைப்பில் இந்தியர் ஒருவர் செய்த தவறுதான்.

மது கொட்டுமுக்கலா என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். இவர், சைபர் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவர் ChatGPTல் அமெரிக்காவின் ரகசிய ஆவணம் ஒன்றை தவறாக பதிவேற்றிவிட்டார். அந்த ஆவணம் மிக முக்கிய ரகசிய ஆவணம் எல்லாம் கிடையாது. ஆனால், அலுவலக பயன்பாட்டுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆவணம் அது. இருப்பினும் இதை எப்படி ChatGPTல் பதிவேற்றலாம் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
கடலில் போட்ட உப்பும், ChatGPTல் போட்ட போட்டோவும்.. போட்டது போட்டதுதான். அதை டெலிட் செய்யவே முடியாது. எனவே மது மீது, இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ChatGPT-யை பயன்படுத்த சிறப்பு அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் ஆவணங்களை பதிவேற்ற இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இந்த விஷயம் டெக் உலகில், இந்தியர்கள் மீத விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்தது. குறிப்பாக தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள், இந்தியர்கள் என்றாலே இப்படித்தான் என்று போட்டு வறுத்தெடுத்தனர்.இந்தியர்கள் தொழில்நுட்பத் துறையில் தகுதியற்றவர்கள் என்றும், எப்போதுமே எல்லாமே அவசரம் என்று பதற்றத்தை உருவாக்குபவர்கள் என்று பேச தொடங்கினர். இந்தியப் பணியாளர்கள் காரணமே இல்லாமல் கத்துவார்கள், மிரட்டுவார்கள் என பொத்தாம் பொதுவாக பேச தொடங்கினர்.
இப்படி இருக்கையில்தான் அமெரிக்க மென்பொருள் பொறியாளரான ஜான் ஃப்ரீமேன், என்னுடைய டீம் லீட் இந்தியர், எனது மேலாளர் இந்தியர், அவருக்கு மேலதிகாரியும் இந்தியர், நிறுவனத்தின் CTO கூட இந்தியர் தான். அவர்கள் அனைவருமே மிகச் சிறந்த அறிவாளிகள். தொழில்முறைத் தகுதியுள்ளவர்கள்" என்று குறிப்பிட்டார். இந்த கருத்து இந்தியர்கள் குறித்த பார்வையை மாற்றியிருக்கிறது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications