"2,500 அடி ஆழம்!" அட்லாண்டிக் கடலில்.. நூல் பிடித்தார் போல இருக்கும் துளைகள்.. குழம்பிய ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான கடற்பரப்பில் இருக்கும் துளைகளை ஆய்வாளர்களைக் குழம்பச் செய்துள்ளது.
நமது இந்த பூமி பல்வேறு உயிர்களை உள்ளடக்கியது. பூமியில் இருக்கும் பல உயிரினங்கள் குறித்து நமக்கு இன்னும் கூட முழுமையாகத் தெரியாது.
குறிப்பாக, பெருங்கடல் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அட்லாண்டிக் பெருங்கடலில் துளைகளைக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடலின் தரைப் பரப்பில் தொடர்ச்சியான துளைகள் கண்டறியப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். சுமார் 2,540 அடி ஆழத்தில் உள்ள இந்த துளைகள் எப்படித் தோன்றியது என யாருக்கும் தெரியாது. நிலவைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவு கூட ஆழ்கடல் குறித்து நமக்குத் தெரியாது. நமது ந்த பூமியில் கடல் என்பது மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

துளைகள்
இந்த ஆழ்கடல் பல்வேறு தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டு இருக்கிறது. இவை கடலின் ஆழத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையில் செழித்து வளரும். ஆனால், அங்கு மனிதர்களால் எளிதாகச் சென்றுவிட முடியாது. ஏனென்றால், அங்கு இருக்கும் அழுத்தம் நொடிகளில் நம்மைக் கொன்றுவிடும். அப்படியொரு பகுதியில் தான் இத்தனை துளைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

குழப்பம்
இது அவர்களைக் குழப்பி உள்ளது. துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதை போலத் தோன்றினாலும், கடலின் அடிப்பகுதிக்குச் சென்று எந்தவொரு மனிதராலும் இப்படி துளைகளை அமைக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு, இந்த துளைகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய ஒரு குழு முயன்றது. இருப்பினும், அது வெற்றிகரமானதாக இல்லை. சில ஆய்வாளர்கள் சுற்றியிருக்கும் வண்டல் குவியல்களால் இந்த துளைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

முதல்முறை இல்லை
அதேநேரம் ஆழ்கடலில் இதுபோன்ற தனித்துவமான துளைகளைக் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை இல்லை. முன்னதாக, கடந்த ஜூலை 2004இல், வடக்கு மத்திய-அட்லாண்டிக் ரிட்ஜ் பகுதியில் சுமார் 2,082 மீட்டர் (6,831 அடி) ஆழத்தில் பல துளைகள் காணப்பட்டன. இந்த துளைகளை ஆய்வாளர்கள் "லெபென்ஸ்புரென்" (lebensspuren) என்று அழைக்கிறார்கள். இதற்கு ஜெர்மன் மொழியில் "வாழ்க்கை தடயங்கள்" என்று பொருளாகும்.

காரணம்
இது குறித்து அந்த ஆய்வாளர் குழு கூறுகையில், "துளைகள் எப்படித் தோன்றியது என்பதில் நமக்கு மர்மம் தொடரவே செய்கிறது. ஆழமான கடலில் இதுபோல எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடக்கிறது. கடல் குறித்துத் தெரிந்து கொள்ள நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்வு பயணத்திலும் நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரிய வருகிறது. வரும் காலத்தில் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என நம்புகிறோம்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications