கண்களை ஏமாற்றும் விண்வெளி.. ஸ்பேஸ் என்பது வெற்றிடம் கிடையாதாம்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: ஸ்பேஸ் அல்லது விண்வெளி என்றால் வெற்றிடம் என்றுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விண்வெளி உண்மையில் வெற்றிடம் கிடையாது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது பூமி இருக்கும் சூரியக் குடும்பத்திலிருந்து தொலைதூர நட்சத்திரங்கள் வரை ஒரு விசித்திரமான சுரங்கப்பாதை பரவியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் காலங்காலமாக நம்பி வந்த நிலையில், தற்போது இதற்கான ஆதரம் கிடைத்திருக்கிறது.

இந்த சுரங்கப்பாதை சூடான, குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவால் ஆனது. இ-ரோசிட்டா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, நம் பால்வெளியின் மறைந்திருக்கும் கட்டமைப்புகள் பற்றிய புதிய தகவல்களை அளிக்கிறது. அத்துடன், விண்வெளி வெறுமையானது என்ற நீண்டகாலக் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகளிடையே ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. அதாவது, சூரியன் "உள்ளூர் சூடான குமிழி" எனப்படும் ஒரு விசித்திரமான பகுதிக்குள் அமைந்துள்ளது என்பதுதான் அது. இந்தக் குமிழி சுமார் 300 ஒளி ஆண்டுகள் அகலமானது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஒரு ஆண்டு முழுவதும் இது எவ்வளவு தொலைவில் பயணிக்கிறதோ அதைத்தான் ஒளி ஆண்டு என்கிறார்கள்.
இந்த சூடான குமிழி, சூப்பர்நோவா வெடிப்புகளால் இது உருவானது. சுற்றியுள்ள வாயுவை சூடாக்கி, சூடான, மெல்லிய பிளாஸ்மாவின் ஒரு குமிழியை உருவாக்கின. இதுவரை, இது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகவே கருதப்பட்டது.
மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் எல். எல். சாலா மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் முன்னாடி நம்பிக்கொண்டிருந்ததை விட இந்தக் குமிழி அதிகத் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வில் சென்டாரஸ் விண்மீன் குழுவை நோக்கி நீட்டிக்கப்படும் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பையும், மேலும் கேனிஸ் மேஜர் திசை நோக்கி செல்லும் மற்றொரு பாதையையும் வெளிப்படுத்தியுள்ளன.
இப்போது நாம் இந்த குழியின் மையத்திற்கு அருகில் இருக்கிறோம், இது திட்டமிட்டது அல்ல, தற்செயலானது. மனித இனம் உருவாவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகிவிட்டது. சிம்பிளாக சொல்வதெனில் நாம் வான வேடிக்கைகளை மிஸ் செய்துவிட்டோம். மட்டுமல்லாது ஒரு பெரிய அண்ட நிகழ்வின் விளைவுக்குள் நாம் தற்செயலாக நுழைந்தது போல உள்ளது. எதிர்காலத்தில் இது பற்றிய ஆய்வு அதிகரிக்கும் அப்போத நாம் இன்னும் அதிகமான விஷயங்களை தெரிந்துக்கொள்வோம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications