திடீரென தெரிந்த மர்ம கோபுரம்! அதுவும் அந்த டாப் சீக்ரெட் இடத்தில்! இது என்ன புதுசா! அலறும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் டாப் சீக்ரெட் பகுதியாக அறியப்படுவது ஏரியா 51.. இங்கு ஏலியன் தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஏரியா 51 பகுதியில் தெரிந்த திடீர் கோபுரம் நெட்டிசன்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மர்மத்தையும் அதிகரிப்பதாக இருக்கிறது.
அமெரிக்கா என்பது பல்வேறு மர்மமான இடங்கள் இருக்கும் ஒரு நாடு. அங்கு அமெரிக்க ராணுவம் சீக்ரெட்டாக பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. அப்படி அமெரிக்காவில் உள்ள டாப் சீக்ரெட் ஏரியா தான் ஏரியா 51. நெவாடாவில் உள்ள இந்த ஏரியா 51 பகுதியில் தான் ஏலியன் குறித்த ஆய்வுகளை அமெரிக்க ராணுவம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏரியா 51
இதற்கிடையே கூகுள் எர்த் செயலியில் திடீரென அந்த ஏரியா 51 பகுதியில் ஒரு விசித்திரமான முக்கோண அமைப்பு காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் செயலியில் குறிப்பிட்ட இடத்தில் அந்த இந்த மர்மமான கோபுரம் காணப்படுகிறது.
மர்ம கோபுரம்
இது வேற்று கிரகவாசிகள் மற்றும் ரகசிய ராணுவ சோதனைகள் பற்றிய விவாதங்களை அதிகரித்துள்ளது. 2.3 மில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்ட அமெரிக்க விமானப்படையின் இந்த ஏரியா 51 என்பது நீண்ட காலமாகவே மர்மம் நிறைந்த பகுதியாகவே பார்க்கப்படும் நிலையில், இந்தக் கோபுரம் மர்மத்தை அதிகரித்துள்ளது. இது லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அமைப்பு, கூகுள் வரைபடத்தில் குறிப்பிட்ட இடத்தில் தெளிவாகத் தெரிகிறதாம்.
அலறும் அமெரிக்கர்கள்
இந்த மர்மக் கோபுரம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது வேற்று கிரகச் செயல்பாடு அல்லது வேற்றுக்கிரகவாசிகளின் ஆராய்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இது கறித்து நெட்டிசன் ஒருவர், "இது நிச்சயமாக வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்பம் தான். பூமி முடிவை நோக்கிச் செல்வதை இது காட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ஏலியன்கள் தங்கள் தொழில்நுட்பங்களைச் சோதிக்கும் இடம் இதுவென பதிவிட்டுள்ளார்.
ஏரியா 51 ஆராய்ச்சிகள்
ஏரியா 51 என்பது லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 83 மைல் தொலைவில் உள்ளது. இது நெவாடா சோதனை மற்றும் பயிற்சிப் பகுதிக்குள் அமைந்துள்ள அமெரிக்காவின் ரகசிய விமானப்படைத் தளமாகும். இந்தத் தளத்தில் வைத்துத் தான் ஏலியன் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து சோதனை நடந்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக ஏரியா 51 குறித்து மர்மம் நிலவி வந்த நிலையில், அமெரிக்கா அது குறித்து மவுனம் சாதித்தே வந்தது. இருப்பினும், ஒபாமா அதிபராக இருந்தபோது 2013ல் தான் ஏரியா 51 என்ற இரு சீக்ரெட் படைத்தளம் இருப்பதைக் குறித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. இருப்பினும், அங்கு என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெறுகிறது என்பதில் இன்னுமே மர்மம் நீடித்து வருகிறது.
என்ன ஆய்வு
ஏலியன் தொழில்நுட்பம் குறித்தும் பூமிக்கு ஏற்கனவே வந்த ஏலியன்கள் குறித்தும் அங்கு ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. உண்மையில், இந்தத் தளம் புதிய ராணுவ தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கும் இடமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், இதன் ரகசியத்தன்மையே இந்த இடத்தின் மர்மத்தை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications