தைவானை ஒன்னும் செய்ய முடியாது.. நாங்க இருக்கோம்! கொம்பு சீவிவிடும் நான்சி பெலோசி! உற்றுநோக்கும் சீனா
வாஷிங்டன்: தைவான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நான்சி பெலோசி கூறிய கருத்துகளை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தைவான் விவகாரம் தான் சர்வதேச அரசியலில் இரு நாட்களாகவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சென்றது சீனாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, தைவான் வான்வழி மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்து.

தைவான்
தைவான் விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த 1940களில் சீனாவில் ஆட்சியில் இருந்து குமிண்டாங் அரசுக்கும் அங்குள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் வென்ற மாவோவின் கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் சீனா சென்றது. அதேநேரம் கமிண்டாங் ஆதரவாளர்கள் அப்படியே தைவான் பக்கம் சென்றுவிட்டனர்..

சீனா
முதலில் தைவானை சீண்டாமலேயே சீனா இருந்து வந்தது. ஆனால், எப்போது சீனா சர்வதேச பொருளாதாரத்தில் முக்கிய நாடாக உருவெடுத்ததோ, அப்போதே தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனச் சீனா கூறி வருகிறது. இதனால் தைவானைத் தனி நாடு என்று கூறினாலோ உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் எங்காவது தைவானுக்கு செல்வதாக அறிவித்தாலோ, சீனா கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். அதேபோன்ற சம்பவம் தான் இப்போதும் நடந்து உள்ளது.

நான்சி பெலோசி
இந்தச் சூழலில் தான் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கப் பிரதிநிதியுமான நான்சி பெலோசி தைவான் நாட்டிற்குச் சமீபத்தில் பயணம் செய்திருந்தார். தைவானைச் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், நான்சி பெலோசி பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நான்சி பெலோசி தைவானில் இருந்த போதே, ராணுவ விமானங்களை அனுப்பி மிரட்டி இருந்தது சீனா!

யாராலும் தடுக்க முடியாது
இது குறித்து அவர் கூறுகையில், "சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபனை காரணமாக, உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து தைவான் தடுக்கப்பட்டது. தைவான் பிரதிநிதிகளைச் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதை அவர்களால் தடுக்க முடியும். ஆனால், ஜனநாயகம் வளரும் உலகத் தலைவர்கள் தைவான் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லா ஒத்துழைப்பையும் தருவோம்" என்றார்.
Recommended Video

உக்ரைன் போர்
தைவான் விவகாரத்தை அமெரிக்கா உற்று நோக்கி வருகிறது. அதிலும் உக்ரைன் போருக்குப் பின்னர், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் உருவானது. எப்படி உக்ரைன் மீது திடீரென புகுந்து ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதோ, அதேபோல சீனாவும் கூட ஹாங்காங், தைவான் பகுதிகள் வலுக்கட்டாயமாக தன்னுடன் இணைத்துக் கொள்ளுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications