வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி! உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய உரையின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை.

    ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    Narendra Modi avoids Jammu Kashmir in UN speech

    தனது உரையின்போது, உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் பாடிய, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியையும் அவர் அப்போது நினைவு கூர்ந்தார்.

    உலகம் வெப்பமயமாதல் பிரச்சினையில் இந்தியா தீர்வை நோக்கியே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது என்றும், உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது குறைவாகவே இருக்கிறது, தீர்வு தான் அதிகமாக உள்ளது என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாடாக மாற்றுவதற்கான தீவிர முயற்சியை இந்திய அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் மாபெரும் சுகாதார காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றெல்லாம் அவர் தெரிவித்தார்.

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடியாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி

    ஆனால் தனது உரையில் எந்த ஒரு இடத்திலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று மத்திய அரசு உறுதியான முடிவில் உள்ளது. இதை சர்வதேச பிரச்சினையாக வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பும் நிலையில், திட்டமிட்டுதான், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக எந்த ஒரு வார்த்தையையும் மோடி பேசவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    இதன் மூலம் உலக நாடுகளுக்கு, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்தான் என்ற மெசேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Narendra Modi avoids Jammu Kashmir while delivered speech in the UN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X