செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி... நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சிவரன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக தரையிறங்கியது.

பெர்சிவரன்ஸ் ரோவர்

பெர்சிவரன்ஸ் ரோவர்

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ஆய்வு விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா? என்ற ஆய்வுக்காக பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. சுமார் 7 மாத பயணம் தொடர்ந்த பெர்சிவரன்ஸ் செவ்வாய்கிரகத்தை அடைந்து சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது.

வெற்றிகரமாக தரை இறங்கியது

வெற்றிகரமாக தரை இறங்கியது

பெர்சிவரன்ஸ் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெசிரோ பள்ளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் ரோபோட்டிக் ரோவர் தனது கடமையை செய்ய தொடங்கியது. செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது. செவ்வாயில் தரை இறங்கிய ரோபோட்டிக் ரோவர் ஒரு டன் எடை கொண்டது. இதில் இரண்டு மீட்டர் கொண்ட இரு ரோபோ கரங்களும், 19 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 5 மைல் தூரம் மாதிரிகள் சேகரித்து 2030-ம் ஆண்டில் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கபப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட வீடியோ

நாசா வெளியிட்ட வீடியோ

ரோவருடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இதை சிறிது தூரம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் வேளையில் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சிவரன்ஸ் ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் இறங்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் உற்சாகம்

நாசா விஞ்ஞானிகள் உற்சாகம்

மேலும், பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியதும், செவ்வாயின் காற்றழுத்த ஓசையும் துல்லியமாக பதிவாகி உள்ளது. விண்கலத்தின் 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 5 கேமராக்கள் மூலம் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோவர் துல்லியமாக தரையிறங்கும் வீடியாவில் நாசா விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவை உண்மையில் அற்புதமான வீடியோக்கள் என்று நாசா விஞ்ஞானிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+