'வாவ்' இவ்வளவு அழகா! பிரமிக்க வைக்கும் புளூட்டோவின் வானவில் வண்ண புகைப்படம்... நாசா சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புளூட்டோவின் பிரமிக்க வைக்கும் வானவில் வண்ன புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி தொடர்பாக வெளியிடும் தகவல்களும் அது தொடர்பான புகைப்படங்களும் உலக அளவில் பிரபலமாகிவிடுகிறது.

சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி படம் பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க காலம் குறித்த புகைப்படம் இணைய உலகம் முழுவதும் பேசுபொருளாக ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புளூட்டோவின் வானவில் வண்ண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

 புளூட்டோவின் புகைப்படம்

புளூட்டோவின் புகைப்படம்

நாசா வெளியிட்டுள்ள இந்த புளூட்டோவின் புகைப்படம் இன்று இணைய உலகை ஆக்கிரமித்து விட்டது என்று சொல்லலாம். சூரிய குடும்பத்தின் வெளிப்புற விளிம்பில் இருக்கும் புளூட்டோ வானவில் நிறத்தில் மிளிரும் புகைப்படம் தான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவும் இந்த புளூட்டோ புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 1 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்டுகளை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பார்த்து 'வோவ்' இவ்வளவு அழகாக இருக்கிறது புளூட்டோ என்று பதிவிட்டு வருகின்றனர் .

 வண்ணங்கள் கொண்டதல்ல

வண்ணங்கள் கொண்டதல்ல

வானவில் நிறத்தில் காட்சி தரும் புளூட்டோவின் அரிய வகை புகைப்படத்தை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில் நாசா கூறியுள்ளதாவது:- "வானவில் எங்கே நிறைவு பெறுகிறது? உண்மையில் புளூட்டோ வித்தியாசமான வண்ணங்கள் கொண்டதல்ல. இந்த கிரகத்தின் தனித்துவமான பகுதிகளுக்கு இடையே உள்ள பல நுட்பமான நிறங்களின் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்காக, இந்த வண்ணப் படம் நியூ ஹொரைசன்ஸ் விஞ்ஞானிகளால் மறுஆக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது.

 அதிக பள்ளங்கள்

அதிக பள்ளங்கள்

சூரியக்குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை அடுத்து 9-வது கோளாக அறியப்பட்டது புளூட்டோ. பின்னர் புளூட்டோவானது குறுங்கோள் வரிசையில் சேர்க்கப்பட்டது. புளூட்டோவின் மேற்பரப்பு பல்வேறு வகையான, மாறுபட்ட மலைகளைக் கொண்டதாகும். செதுக்கப்பட்டது போன்ற பள்ளத்தாக்குகள், அதிக பள்ளங்கள் கொண்ட நிலப்பரப்பு, மென்மையான பனிக்கட்டி சமவெளி ஆகியவைகளையும் கொண்டது.

 எப்படி படம் எடுக்கப்பட்டது?

எப்படி படம் எடுக்கப்பட்டது?

கடந்த 2006-ம் ஆண்டு விண்வெளிக்கு நாசா ஏவிய நியூ ஹொரைசன்ஸ் என்ற விண்கலம் தான் இந்த அரிய வகை புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது. புளூட்டோ மற்றும் அதில் எத்தனை நிலவுகள் உள்ளன என்பது பற்றி ஆராய்வதற்காகவே நாசா இந்த நியூ ஹொரைசன்ஸ் என்ற விண்கலத்தை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பியது. தற்போது சூரிய குடும்பத்தில் இதுவரை கண்டுபிடிக்காத மற்றும் புளூட்டோவுக்கு அடுத்து வேறு ஏதேனும் கோள்கள் உள்ளதா, வேற்று கிரகங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+