கடைசி நொடியில் பெயர்ந்து விழுந்த சாட்டிலைட் கவசம்! சூரியனின் சரிபாதி வெப்பம் வேற! நாசா மிஷனில் பகீர்
வாஷிங்டன்: ஆர்டெமிஸ்-2 பயணத்தில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக நிலவுக்கு அருகே சென்றுவிட்டு, தங்கள் ஆய்வுகளை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். ஆனால், இந்த ஆர்டெமிஸ் மிஷனில் ரொம்பவே ஆபத்தான ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது விண்கலம் பூமியை நெருங்கும்போது அதன் மேற்பூச்சு அப்படியே பெயர்ந்து விழுந்துள்ளது.. ஏன் இதுபோல நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் இப்போது ஆர்டெமிஸ்-2 மிஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதன் கீழ் 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர். இந்த ஆர்டெமிஸ்-2 பயணம் சர்வதேச அளவில் கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியது.

அதீத வெப்பம்
இந்த விண்கலத்தில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது இந்த விண்கலம் பூமியை நோக்கி வரும்போது, அதன் மேற்பரப்பு அதீத வெப்பத்தைத் தொடும். இந்த அதீத வெப்பத்தால் அதன் மேற்பரப்பு அப்படியே பெயர்ந்து விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இப்போது நாசா வெற்றிகரமாக நடத்தியுள்ளது ஆர்டெமிஸ்-2. இதில் தான் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அருகே சென்றுவிட்டுத் திரும்பினார்கள். இதற்கு முன்பு ஆர்டெமிஸ்-1 மிஷனில், அந்த விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது பெயர்ந்து விழுந்தது.. இது ஏதோ சினிமா ஸ்கிரிப்ட் அல்ல, நிஜமாகவே நாசாவின் 'ஓரியன்' விண்கலத்திற்கு ஆர்டெமிஸ்-1 பயணத்தின்போது நடந்த விபரீதம் தான் இது!
நெருப்பு வளையத்தில் ஒரு பயணம்!
ஆர்டெமிஸ் விண்கலங்கள் நிலவைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும்போது சந்திக்கும் வெப்பம் சாதாரணமானது அல்ல. சுமார் 2,760°C அளவுக்கு வெப்பத்தை எதிர்கொள்ளும். அதாவது இது கிட்டத்தட்டச் சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தில் சரிபாதி. இந்த அதீத வெப்பத்திலிருந்து விண்கலத்தையும் அதிலுள்ள வீரர்களையும் பாதுகாக்க, அதன் மேற்பரப்பில் 'அவ்கோட்' (Avcoat) என்ற ஒரு சிறப்பு அடுக்கு பூசப்பட்டிருக்கும். 1960களில் உருவாக்கப்பட்ட இந்த 'அவ்கோட்' தொழில்நுட்பம் முதன்முதலில் அப்பல்லோ விண்கலங்களில் பயன்படுத்தப்பட்டது.
பூமியை நோக்கி வரும்போது ஏற்படும் அதீத வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில்.. இந்த அடுக்கு மெல்ல எரிந்து சாம்பலாகி உதிர்ந்து போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் Ablation என்பார்கள். விண்கலத்திற்குள் வெப்பம் ஊடுருவாமல் தடுக்க இதைச் செய்துள்ளனர். ஆனால், இங்கேதான் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது.
பெரிய துண்டுகள்
முந்தைய ஆர்டெமிஸ்-1 பயணத்தின்போது, இந்த வெப்பத் தடுப்புக் கவசம் சீராகக் கரையாமல், ஆங்காங்கே பெரிய துண்டுகளாகப் பெயர்ந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இப்படி கவசம் அதிகமாகப் பெயர்ந்து விழுந்தது நாசா விஞ்ஞானிகளையே அதிர வைத்தது.
விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது 'ஸ்கிப் என்ட்ரி' எனும் முறையைக் கையாள்கிறது. அதாவது குறிப்பிட்ட ஆங்கிளில் தண்ணீரில் கல்லை எறியும்போது, அது துள்ளிச் செல்வதைப் போல, விண்கலம் வளிமண்டலத்தில் மோதித் துள்ளித் திரும்பும். இந்த இடைவெளியில் ஏற்பட்ட அழுத்த மாற்றத்தால், கவசத்திற்கு அடியில் உருவான வாயுக்கள் வெளியேற முடியாமல் திணறி, மேல் அடுக்கைத் துண்டு துண்டாக உடைத்து எறிந்தன. இதன் காரணமாகவே எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவு அவ்கோட் பெயர்ந்து விழுந்தது.
வெற்றிகரமான பயணம்
இதனால் விண்வெளி வீரர்கள் செல்லும் ஆர்டெமிஸ் 2 பயணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதில் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும், எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஆர்டெமிஸ்-2 விண்கலம் சமீபத்தில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்குத் திரும்பியுள்ளது. நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற இந்த விண்கலம், பாதுகாப்பாகத் தரை இறங்கியது ஒட்டுமொத்த உலகிற்கும் நிம்மதியைத் தந்தது.
என்ன செய்தனர்
- பாதை மாற்றம்: விண்கலம் பூமிக்குள் நுழையும் கோணத்தை நாசா விஞ்ஞானிகள் நுணுக்கமாக மாற்றியமைத்தனர். இதன் மூலம் கவசத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சீராகப் பகிரப்பட்டது.
- கூடுதல் பாதுகாப்பு: அதேபோல விண்கலம் மீது அமைக்கப்பட்டிருந்த அவ்கோட் சிறப்புப் பூச்சின் தடிமனும் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் அதிகமாகப் பெயர்ந்து விழுந்தாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆர்டெமிஸ் 1 மற்றும் ஆர்டெமிஸ் 2 ஆய்வாளர்கள் கற்றுக் கொண்ட இந்தப் பாடம், அடுத்து நிலவில் மனிதர்களைத் தரை இறக்கப்போகும் ஆர்டெமிஸ்-3 திட்டத்திற்கு ஒரு மாபெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. பழைய தொழில்நுட்பமாக இருந்தாலும், இன்றைய நவீன விண்வெளிப் பயணங்களிலும் இந்த அவ்கோட் தான் மனித உயிர்களைக் காக்கும் கவசமாக விளங்குகிறது.
-
விண்வெளி வரலாற்றின் கேம் சேஞ்சர்.. மனிதன் செவ்வாய்க்கு போவது நிஜமாகிறது? ஆர்டெமிஸ்-II ஏன் முக்கியம்? -
50 ஆண்டு ஏக்கம்.. நிலவை சுற்றி வந்த 4 நாசா வீரர்கள்! ஆர்டெமிஸ்-II மிஷன் என்றால் என்ன? ஏன் முக்கியம்? -
பூமியில் வெற்றிகரமாக தரையிறங்கிய.. ஆர்டெமிஸ்-II மிஷன்.. நிலவை சுற்றிவிட்டு.. திரும்பிய 4 வீரர்கள்! -
உலகமே எதிர்பார்க்கும் 5:23 மணி.. கடலில் விழும் நாசா விண்கலம்; 14 நிமிடத்தில் தப்பிப்பார்களா வீரர்கள் -
90s கிட்ஸுக்கு குட் நியூஸ்! புளூட்டோ கிரகம் குறித்து.. நாசா சொன்ன மேட்டர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!














Click it and Unblock the Notifications