இன்னைக்கே கடைசி நாளாக கூட இருக்கலாம்.. பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரிய புயல்! நாசா வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியை சக்தி வாய்ந்த சூரிய புயல் தாக்கியிருப்பதாக, நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. பூமியை மொத்தமாக அழிக்கும் திறன் கொண்டவை. எனவே இந்த புயல்கள் குறித்த செய்தி தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்கு சூரியனிலிருந்து, சக்தி வாய்ந்த சூரிய புயல் வீசியிருப்பதாக நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயல் உருவாகும் அரிய நிகழ்வை நாசா படம் பிடித்திருக்கிறது.

NASA Records Solar Flare

சூரிய புயல்கள்

சூரிய புயல்கள், அவற்றின் வலிமையை பொறுத்து வகைப்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்தப் புயல்களில் A மற்றும் B வகுப்பு மிகவும் பலவீனமான புயல்களாகும். இவை பூமியின் வளிமண்டலத்தையோ, அல்லது தகவல் தொடர்பு சாதனங்களையோ எந்த வகையிலும் பாதிக்காது. இருப்பினும் இந்த புயல்கள் சூரியனின் அடிக்கடி ஏற்படுகின்றன.

சூரிய புயல்களின் வகைகள்

அதேபோல C வகுப்பு புயல்கள் சிறிய அளவிலான சீற்றங்களாகும். இவை பூமியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் விண்வெளியில் உள்ள ஆய்வுக் கருவிகளால் இவற்றை எளிதாக கண்டறிய முடியும். இந்த 2 பிரிவை விட 3வது உள்ள பிரிவு M வகையைச் சார்ந்தது. பூமியின் துருவப் பகுதிகளில், குறுகிய நேர ரேடியோ பிளாக் அவுட் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த புயல்கள் வலிமை கொண்டவை. விண்வெளி வீரர்களுக்கு சிறிய அளவில் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பை ஏற்படுத்தும் புயல்கள்

இந்த மூன்று வகைகளில் இறுதியானது தான், X வகை. இவைதான் சூரியனின் மிகப்பெரிய மற்றும் மிக வலிமையான புயல்களாகும். இவை உலகளாவிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. பூமி முழுவதிலும் ரேடியோ சிக்னல்கள் துண்டிக்கப்படலாம். செயற்கைக்கோள்களை சேதப்படுத்தலாம், இது தவிர மின்சார கட்டமைப்புகளை முடக்கலாம். அந்த வகையில் இன்று ஏற்பட்டது X வகையை சேர்ந்ததாகும்.

என்னென்ன பாதிப்புகள் வரும்?

இதனால் உயர் அதிர்வெண் கொண்ட ரேடியோ சிக்னல்களில் பாதிப்பு அல்லது தற்காலிக தடை ஏற்படலாம். குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இன்று ரேடியோ பிளாக் அவுட் பதிவாகியுள்ளது. மின் விநியோக கட்டமைப்புகளில் சிறிய அளவிலான அழுத்தம் மாற்றங்கள் ஏற்படலாம். அதேபோல விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட கூடும். இது தவிர ஜிபிஎஸ் சிக்னல்களில் துல்லியத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.

பூமி தப்பிக்குமா?

இந்த வகையான புயல்கள், இன்று எதோ புதியதாக ஏற்படுவது கிடையாது. பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி இன்று வரை 3 புயல்கள் உருவாகி உள்ளன. இது 4வது புயல். இந்த 4 புயல்களும் இதே X வகையை சேர்ந்தவை தான். இன்று உருவாகியுள்ள புயல் காரணமாக வரும் பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் பூமியின் துருவப் பகுதியில் அதாவது, ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் அரோரா தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த X புயலிலும் வகைகள் உள்ளன. இன்று ஏற்பட்டிருப்பது X 4.2 வகை புயல். இதுவே X 10க்கும் மேல் புயல் பதிவானால் நிச்சயம் பூமி மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும். நேரடியாக மனித உயிருக்கு ஆபத்தை இந்த புயல்கள் ஏற்படுத்தாது. இருப்பினும் மின்னணு பொருட்களை செயலிழக்க வைத்துவிடும். குடிநீர், மருத்துவமனை இல்லாமல் மனிதர்களால் நீண்ட காலத்திற்கு வாழ முடியாது.

இந்த ஆண்டு இப்படியான புயல்கள் வீச அதிக வாய்ப்புகள் உள்ளன என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். யாருக்கு தெரியும் இப்படியான புயல் வீசினால் இன்றே கூட நம்முடைய கடைசி நாளாக இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+