கிரேட் எஸ்கேப்! விண்கல் மோதலிலிருந்து தப்பித்தது நிலவு! நாசா கொடுத்த முக்கிய அப்டேட்
வாஷிங்டன்: கடந்த 2024-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விண்கல், நிலவு மீது மோதும் என்றும், இந்த மோதலால் பூமிக்கும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விண்கல் குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறது.
2024 YR4 என்ற விண்கல்லால் நிலவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருந்து கிடைத்த புதிய தரவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தின்,பூமிக்கு அருகிலுள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம் இம்முடிவை எட்டியுள்ளது. புதிய தகவல்களின்படி, இந்த விண்கல் நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 21,200 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாக கடந்து செல்லும்.
மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் ஆய்வகத்தின் குழு ஒன்று, பிப்ரவரி 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்தக் கண்காணிப்புகளை மேற்கொண்டது. 2025 வசந்த காலத்திற்குப் பிறகு வேறு எந்த தொலைநோக்கியாலும் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலான சென்ற இந்த விண்கல்லை, வெப் தொலைநோக்கியின் சிறப்புத் திறன்கள் மட்டுமே கண்டறிய உதவியது. இந்த புதிய தரவுகள் விண்கல்லின் சுற்றுப்பாதையை மாற்றவில்லை; மாறாக, அதன் எதிர்கால இருப்பிடம் குறித்த துல்லியத்தன்மையை மேம்படுத்தியுள்ளன.
முன்னதாக, நடத்தப்பட்ட ஆய்வுகளில் '2024 YR4' என பெயரிடப்பட்டிருந்த இந்த விண்கல், இந்த விண்கல் 2032ம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று நிலவில் மோதும் வாய்ப்பு 4.3% ஆக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த விண்கல் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சிலியில் உள்ள ATLAS விண்வெளி ஆய்வு நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதன் சுற்றுப்பாதை பற்றிய தகவல்கள் பூமிக்கு ஒரு சிறிய, ஆனால் முக்கியமான மோதல் அபாயத்தை சுட்டிக்காட்டின.
உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்களால் கூடுதல் கண்காணிப்புகள் சேகரிக்கப்பட்ட பிறகு, நாசா இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விண்கல் அடுத்த நூற்றாண்டிலும் பூமிக்கு எந்த பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று நாசா உறுதி செய்திருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications