செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது முறையாக பறந்த இன்ஜெனுவிட்டி ஹெலிகாப்டர்.. வீடியோ வெளியிட்ட நாசா
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது முறையாக நாசாவின் குட்டி ஹெலிகாப்டர் இன்ஜெனுவிட்டி வெற்றிகரமாக பறந்தது. இதன் வீடியோவை பெர்ஸிவியரன்ஸ் ரோவர் வெளியிட்டுள்ளது.
Recommended Video
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதர்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.

இந்த ரோவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி என பெயரிடப்பட்டுழள்ள இந்த ஹெலிகாப்டரின் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இதன் மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் என இருமுறை இன்ஜெனியூனிட்டி எனும் ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக நேற்றைய தினம் இன்ஜெனுவிட்டி எனும் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்தது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர் 39.1 வினாடிகளுக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பியது.
பூமியும் செவ்வாய் கிரகமும் தற்போது சுமார் 295 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. அதனால் வானிலை சமிக்கைகள் அந்த தூரத்தை கடக்க 16 நிமிடங்களுக்கு மேல் ஆகும். செவ்வாய்கிரகம் மிகவும் மெலிதான வளி மண்டலத்தை கொண்டதாகும். அதாவது இதன் அடர்த்தி பூமியில் வெறும் ஒரு சதவீதமாகும். இந்த ஹெலிகாப்டரில் வண்ண கேமரா உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications