"கன்பார்ம்!" தொலை தூரத்தில் இருக்கும் கிரகத்தில் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு.. கலக்கும் ஜேம்ஸ் வெப்!
வாஷிங்டன்: பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகம் குறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முக்கிய விஷயங்களைக் கண்டுபிடித்து உள்ளது.
Recommended Video
உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் பிரபஞ்சம் குறித்து தீவிர ஆய்வை செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் ஒவ்வொரு முறையும் வியக்கத்தக்க வகையில் பல தகவல்களை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பார்கள்.
குறிப்பாகப் பூமிக்கு வெளியே எந்த கிரகத்தில் உயிர்கள் உள்ளன அல்லது உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்த ஆய்வுகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜேம்ஸ் வெப்
இதுபோன்ற ஆய்வுப் பணிகளுக்காகத் தான் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. ஏற்கனவே விண்ணில் இருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியின் அப்டேட் தான் இது. 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முதலில் பதிவு செய்த படத்தைச் சமீபத்தில் தான் அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு இருந்தார்.

நீருக்கான ஆதாரம்
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கிரகத்தில் தண்ணீருக்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து உள்ளது. சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் WASP-96 b என்ற கிரகத்தில் வெப்பமான, வாயு கிரகத்தின் வளிமண்டலத்தில், மேகங்கள் மற்றும் மூடுபனிக்கான ஆதாரங்களுடன் தண்ணீரின் அறிகுறிகளையும் ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் கண்டுபிடித்து உள்ளது.

விரிவான ஆய்வு
வேற்று கிரகங்களில் நீர் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் இது தான் மிகவும் விரிவானது. WASP-96 b என்ற வெளிக்கோளில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தெற்கு வான விண்மீன் பீனிக்ஸ் பகுதியில் சுமார் 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போன்ற அமைப்புகள் அங்கே இல்லை. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது வியாழன் கோளை விடப் பாதிக்கும் குறைவான நிலையைக் கொண்டு இருந்தாலும், இந்த WASP-96 b 1.2 மடங்கு பெரியதாக உள்ளது.

வெப்பம்
அதேபோல இந்த கிரகத்தில் 538 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். WASP-96 b அதன் சூரியனைப் போன்ற நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றி வருகிறது. அதாவது புதனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே, WASP-96 b-க்கும் அதன் சூரியன் போன்ற நட்சதிரத்திற்கும் இடையேயான தூரம் உள்ளது. பூமியில் 3.5 நாட்கள் முடியும் முன்னரே, WASP-96 b அதன் நட்சத்திரத்தை முழுமையாகச் சுற்றி வந்துவிடுகிறது.

முக்கியம்
பெரிய அளவு, குறுகிய சுற்றுப்பாதை, பெரிய வளிமண்டலம் மற்றும் வானத்தில் அருகிலுள்ள பொருட்களிலிருந்து வெளிப்படும் மாசுபடுத்தும் ஒளி ஆகியவை WASP-96 bஐ முக்கியமானதாகக் காட்டுகிறது. ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட WASP-96 b பண்புகளை ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் உறுதி செய்வதாக உள்ளது. இது விண்வெளி குறித்த ஆய்வில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வரும் காலம்
வரும் காலத்தில் WASP-96 b குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. WASP-96 b பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளதால், தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு நம்மால் அங்குச் செல்ல முடியாது. இந்த குறையைப் போக்கும் வகையில் ஜேம்ஸ்-வெப் டெலஸ்கோப் பணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications