ஆஹா செம! சிறுகோள் முழுக்க தங்கம், பிளாட்டினம்! பிரித்து கொடுத்தா பூமியில் எல்லாரும் அழகுபார்க்கலாமே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நாசா இப்போது மிக முக்கியமான அஸ்டிராய்ட் அதாவது சிறுகோளை கண்டுபிடித்துள்ளது. தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் தான் இந்த சிறுகோள் முழுக்க நிரம்பி இருக்கிறதாம். 16 சைக் என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோளில் தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலை மதிப்பற்ற உலோகங்கள் தான் அதிகம் இருக்கிறது.

நமது பூமியைச் சுற்றியுள்ள கிரகங்கள் சிறுகோள்கள் குறித்து நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வரும். இதற்கிடையே முழுக்க முழுக்க தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலை மதிப்பற்ற உலோகங்களால் நிரம்பியுள்ள ஒரு சிறுகோளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளன.

nasa science

இந்த கிரகத்தில் இருக்கும் வளங்களை எடுத்து நாம் பூமியில் இருக்கும் அனைவருக்கும் சரி சமமாகக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் கோடீஸ்வரராகி விடலாம். அந்தளவுக்கு விலைமதிப்பற்ற உலோகங்கள் இதில் குவிந்து கிடக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எங்கே இருக்கிறது: செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு நடுவே உள்ள இந்த 16 சைக் சிறுகோளில் நிக்கல், இரும்பு, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறதாம். இதன் மூலம் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகவும் மதிப்புமிக்க ஒரு சிறுகோளாக இது மாறியிருக்கிறது.

அதேநேரம் இந்த சிறுகோள் இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை.. இது முதன்முதலில் கடந்த 1852ம் ஆண்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த அன்னிபேல் டி காஸ்பரிஸ் என்ற வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆனால், அப்போது இந்த கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. அதற்கான விடை இப்போது தான் கிடைத்துள்ளது.

விலைமதிப்பற்ற உலோகங்கள்: சுமார் 226 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த சிறுகோளில் பல விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளன. குறிப்பாக நிக்கல் மற்றும் இரும்பு தான் அதிகமாக இருக்கிறது. மேலும், தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கூட கணிசமான அளவுக்கு இருக்கிறது. இதன் சைஸ் உடன் ஒப்பிடும் போது எடை அதிகமாக இருந்ததால் விலைமதிப்பற்ற உலோகங்கள் இதில் இருக்கலாம் என்று சந்தேகித்தே பல ஆண்டுகளாக இதை வானியலாளர் ஆய்வு செய்து வந்தனர்.

இப்போது அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 16 சைக் என்ற இந்த சிறுகோளின் மதிப்பு 10 குவாட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 100 மில்லியன் பில்லியன் டாலர்களாகும். அதாவது அமெரிக்க டாலர் மதிப்பிலேயே இந்த நம்பரை நாம் எழுத வேண்டும் என்றால் 1ஐ போட்டு, அதன் பிறகு 19 பூஜ்ஜியங்களைப் போட வேண்டும்.

எல்லாரும் கோடீஸ்வரர்கள் தான்: இதை நாம் ரூபாய் மதிப்பில் மாற்றினால் அது எங்கோ போய்விடும். கணினியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்தளவுக்குப் பெரிய தொகையாகும். இந்த செல்வத்தை நாம் பூமியில் இருக்கும் அனைவருக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தால் இங்குள்ள எல்லோரும் எடுத்து அழகு பார்க்கலாம்.

அதான் சொத்துகள் கொட்டி கிடைக்குதே.. சட்டுனு போய் எடுத்துட்டு வந்திடலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம்.. உண்மையில் அது குறித்தும் நாசா ஆய்வாளர்கள் ஆய்வை தொடங்கிவிட்டனர். ஆனால், அதை வெட்டி எடுப்பது ஒன்னும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லையாம். அங்கிருந்து உலோகங்களை வெட்டி எடுத்து வர வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியக் கடந்த 2023இல் நாசா தனியாக ஒரு சாட்டிலைட்டை அனுப்பி இருந்தது.

நாசா: அந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், நாசா அனுப்பிய சாட்டிலைட் அங்குச் சென்றடையவே 2029ம் ஆண்டு ஆகிவிடுமாம். நாசா அனுப்பிய அந்த சாட்டிலைட் 16 சைக் சிறுகோளை 26 மாதங்கள் சுற்றி வருமாம். அப்போது 16 சைக் சிறுகோள் குறித்துக் கூடுதல் தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், இந்த சிறுகோள் தனியாகச் சுற்றி வரும் சிறுகோள் இல்லை. இதற்கு அருகிலேயே பல மதிப்புமிக்க சிறுகோள்கள் இதைச் சுற்றி வருகிறது. அதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அதன் மொத்த மதிப்பு சுமார் 700 குவாட்ரில்லியன் டாலர்களாக இருக்கும். அந்த கூட்டத்தில் மிகவும் சிறிய சிறுகோளின் மதிப்பே சுமார் 27 குவாட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+