அபாயம்! இந்த ஜூலை தான் உலகின் மிக வெப்பமான மாதம்.. “இதை விட ஒரு பயங்கரம்” - நாசா விஞ்ஞானி வார்னிங்!
வாஷிங்டன்: இந்த ஜூலை மாதம் தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என்று நாசாவின் முக்கியமான காலநிலை நிபுணர் கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அலெர்ட் மெசேஜையும் கொடுத்துள்ளார் அவர்.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம் தான் இருக்கும் என நாசா காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்தது. அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை மிஞ்சும் வகையில் ஜூலை 3-ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது.
தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.
இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் தமிழ்நாட்டிலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தொடங்கியது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக நாசாவே தகவல் வெளியிட்டுள்ளது.
நாசாவின் வாஷிங்டன் தலைமையகத்தில் நாசா நிர்வாகி பில் நெல்சன் மற்றும் தலைமை விஞ்ஞானியும் மூத்த காலநிலை ஆலோசகர் கேட் கால்வின் உள்ளிட்ட காலநிலை நிபுணர்கள் மற்றும் பிற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மூத்த காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
எல் நினோ ஒரு சிறிய பங்கு வகித்தாலும், நாம் பார்ப்பது ஒட்டுமொத்த வெப்பத்தையே, எல்லா இடங்களிலும், குறிப்பாக கடல்களின் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது. பல மாதங்களாக, வெப்பமண்டலத்திற்கு வெளியேயும் கூட, கடல் மேற்பரப்பு வெப்பநிலை முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து வருகிறது என கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
2023 ஜூலை மாதம் தான் மிக அதிக வெப்பமான மாதமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஷ்மிட், தற்போது தனது கணக்கீடுகளின் அடிப்படையில் இதற்கு 50-50 வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மற்ற காலநிலை விஞ்ஞானிகள் இதற்கு 80 சதவிகிதம் வரை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு 2023 ஐ விட அதிக வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் எல் நினோ வானிலை முறை - உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கும் போக்குக்கு பெயர் பெற்றது. இந்த ஆண்டின் இறுதியில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications