அது பாட்டி சுடும் வடை இல்லை.. நிலவில் ஒரு இடத்தில் மட்டும் ஓவரா ஜொலிக்குதே.. ஓ இதுதான் மேட்டரா
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான குழு தான் முதலில் நிலவில் கால் வைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அன்று அவர்கள் செய்த ஒரு சின்ன மேட்டர் இப்போது வரை பல ஆய்வுகளுக்கு உதவி வருவது உங்களுக்குத் தெரியுமா.. இது நிலவு குறித்துப் பல முக்கிய விஷயங்களை நாம் கண்டறியவும் உதவி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வாங்க இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலை 15ம் தேதி அமெரிக்க நாசாவின் அப்பல்லோ 11 விண்கலம் நிலவை நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியது.

அந்த வின்கலனில் மூன்று பேர் இருந்தார்கள். இந்த பயணம் தான் சர்வதேச விண்வெளி ஆய்வை முழுமையாக மாற்றி அமைத்தது என்றே சொல்லலாம்.
நிலவு: நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான அப்பல்லோ 11 குழுவினர் மனித வரலாற்றில் முத்முறையாக நிலவில் தரையிறங்கினர். நிலவில் தரையிறங்கிய முதல் நபர் என்ற சிறப்பையும் நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார். நீல் ஆம்ஸ்ட்ராங் அன்று வானிலை வைத்த சிறிய ஸ்டேப், மனிதக் குலத்திற்கு மிகப் பெரிய பாய்ச்சலாக அமைந்துவிட்டது.
ஆம்ஸ்ட்ராங்: ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோரை கொண்ட இந்த குழு நிலவில் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளுக்குப் பிறகு அந்த குழு ஜூலை 21, 1969ம் ஆண்டு நிலவில் இருந்து புறப்பட்டனர். அங்குப் பல ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள் நிலவின் பாறைகள் மற்றும் மண்ணை எடுத்து வந்தனர். மேலும், அங்கிருந்தபடியே அமெரிக்க அதிபருடன் தொலைப்பேசியிலும் பேசினர். அதன் பிறகே அவர்கள் பூமிக்குத் திரும்பினர்.
சின்ன தவறு: ஆனால், அப்படித் திரும்பும் போது அவர்கள் ஒரு சின்ன விஷயத்தை அங்கேயே மறந்துவிட்டனர். அந்த கருவி 55 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் தொடர்ந்து செயல்படுகிறது. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. அதாவது இந்த அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் 100 குவார்ட்ஸ் கண்ணாடி ப்ரிஸங்களை வைத்துவிட்டனர்.. இது நிலவு குறித்து நமக்கு அதிக புரிதலைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
55 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது எப்படி இப்போது வரை சரியாகச் செயல்படும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்குக் காரணமே அந்த ப்ரிஸம்களின் எளிமையே காரணமாகும். இவை இயங்க எந்தவொரு பவரும் தேவையில்லை. இந்த ப்ரிஸங்கள் பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் லைட்களை பிரதிபலிக்கின்றன. இந்த ஒளி நிலவுக்குச் சென்றுவிட்டுத் திரும்ப எத்தனை நேரம் ஆகிறது என்பதை வைத்தே பூமி நிலவில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை மில்லிமீட்டர் அளவுக்குத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
ஏன் முக்கியம்: ஆண்டின் ஒவ்வொரு காலகட்டத்தில் நிலவு எத்தனை தொலைவில் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இதுபோல பல ஆண்டுகள் செய்த ஆய்வில் தான் நிலவு பூமியில் இருந்து மெல்ல விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்டுக்கு 1.5 அங்குலம் அதாவது 3.8 செமீ என்ற விகிதத்தில் பூமியிலிருந்து மெல்ல நகர்ந்து செல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சந்திரனின் கோர் அதாவது மையப் பகுதியில் ஒரு திரவ கோர் இருப்பதை உறுதி செய்ததும் இந்த ப்ரிஸம் தான்.












Click it and Unblock the Notifications