"ஒரே கணவர் பல மனைவிகள்.." அதுவும் ஒரே வீட்டில்.. யாருப்பா நீங்க எல்லாம்! வயிறு எரியும் நெட்டிசன்கள்
உலகில் பல பகுதிகளிலும் பலதரப்பட்ட மனம் என்பது அதிகரித்து வருகிறது
வாஷிங்டன்: இங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே 90s கிட்ஸ் போராடிக் கொண்டிருக்கும் போது.. சில நாடுகளில் ஒருவர் பலரைத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதைப் பார்த்து நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நவீன காலத்தில் எல்லாமே மாறி வருகிறது. ஒரு காலத்தில் நாம் தவறு என்று இந்த சமூகம் நினைத்தது கூட இப்போது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாகி வருகிறது. இது சிலருக்குக் கலக்கத்தைத் தந்தாலும் இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடிவதில்லை.
அப்படி உலகெங்கும் நடக்கும் சில சம்பவங்கள் தான் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளன. இதை எல்லாம் கண்டு கடுப்பாகும் 90ஸ் கிட்ஸ் இணையத்தில் புலம்பித் தள்ளி வருகின்றனர்.

பலதரப்பட்ட மனம்
இணைய வழி டேட்டிங் செயலிகள் வந்த பிறகு டேட்டிங் முறை முற்றிலுமாக மாறிவிட்டது. இதில் குறுகிய நேரத்தில் பலரை டேட் செய்ய முடிகிறது. இதனால் ஒருவர் ஒரே நேரத்தில் பல பேருடன் உறவில் இருப்பதும் அதிகரித்தே வருகிறது. பாலிகாமி எனப்படும் பலதரப்பட்ட மனம் அல்லது பலதரப்பட்ட காதல் இந்த காலகட்டத்தில் என்பது மீண்டும் சில நாடுகளில் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஒரே நபர் பல பேருடன் உறவில் இருப்பதும்.. பலரைத் திருமணம் செய்து கொள்ளும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இரட்டை அழகிகள் ஆடைகள், உணவு தொடங்கிக் குளிக்கச் செல்வது தூங்கச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகத் தான் செய்வார்கள். இந்த ஆஸ்திரேலியா இரட்டை அழகிகள் இப்போது அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டார்கள் எனச் சொல்லலாம். ஆமா.. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ப்பமடைய முயல்கிறார்களாம்... அதுவும் ஒரே நபருடன்.. இதற்காக இவர்கள் இருவரும் ஒரே நபரை இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் கர்ப்பம்
ஒரே நேரத்தில் கர்ப்பமடைவது கஷ்டமாக இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், இதற்காக இருவரும் ஒரே நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். என்ன முயன்றாலும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைவது கஷ்டமாக உள்ளதாகக் கூறி கூறுகிறார்கள் இந்த 37 வயது இரட்டை அழகிகள். இருப்பினும், நிச்சயம் விரைவில் ஒரே நேரத்தில் நாங்கள் இருவரும் நிச்சயம் குழந்தையைப் பெற்றெடுப்போம் என்று கண் சிமிட்டுகிறார்கள். கென்யாவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கென்யா
கென்யாவில் ஸ்டீவோ என்பவர் சகோதரிகளான கேட், ஈவ் மற்றும் மேரி என்று மூன்று பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. அவர் முதலில் மூத்த சகோதரியான கேட்டை சந்தித்துள்ளார்.. இருவருக்கும் இடையே பார்த்தவுடன் காதல் வந்துவிட்டது.. கொஞ்ச நாள் கழித்து ஸ்டீவோ கேட்டின் சகோதரிகளையும் சந்தித்துள்ளார். பார்த்தவுடன் அவர்கள் மீதும் காதல் வந்துவிட்டதாம்.. இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் கேட்டின் சகோதரிகளைச் சந்தித்து உரையாடினேன். கொஞ்ச நேரம் தான் அவர்களுடன் பேசியிருப்பேன்.. எனக்கு அவர்கள் மீது ஒரு வித உணர்வு ஏற்பட்டது. அப்போதுதான் நான் உணர்ந்தேன்.. மூன்று பேரும் எனக்கானவர்கள் என்று.." இதையடுத்து அவர் மூவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தாய்லாந்து
இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார் தாய்லநாத்தை சேர்ந்த நபர்.. அவர் 8 பேரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். 8 பேரை திருமணம் என்றால்.. நாம் செய்திகளில் படிப்பதைப் போல அவர் யாரையும் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக அவர் தனது அனைத்து மனைவிகளுடன் சந்தோஷமாகவே வாழ்கிறார்.. அதுவும் ஒரே வீட்டில்.. திருமணம் செய்து கொள்ளவே பயப்படும் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் 8 திருமணம் செய்து கொண்டு ஆச்சரியத்தைத் தருகிறார் இவர். தாய்லாந்து நாட்டை சேர்ந்த இவரது பெயர் ஓங் டாம் சொரோட். அங்கு பாரம்பரிய முறையில் போடப்படும் ஒரு வகை டாட்டு கலைஞராக இருக்கிறார்.. இவர் தனது குடும்பம் குறித்து நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்ட வீடியோ யூடியூபில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இவர் தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்துள்ளார். பார்த்தவுடன் காதல் வர உடனே திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே நடந்தது டும் டும் டும்...

மனைவிகள்
இரண்டாவது மனைவி நோங் எல் என்பவரை மார்கெட்டிலும், மூன்றாவது மனைவி நோங் நானை மருத்துவமனையிலும் சந்தித்துள்ளார். இவர் தனது நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகள் முறையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் தளங்கள் மூலம் சந்தித்தனர். இவர் தனது ஏழாவது மனைவி நோங் ஃபிலிமை தனது தாயுடன் கோவிலுக்குச் சென்றபோது சந்தித்தார்.. அவரது எட்டாவது மற்றும் இறுதி மனைவி (இப்போதைக்கு இறுதி மனைவி) நோங் மாய், தனது நான்கு மனைவிகளுடன் விடுமுறைக்குச் சென்ற போது சந்தித்துள்ளார். இந்த எட்டு பெண்களும் தங்கள் கணவரைப் பற்றி ஒரே மாதிரி தான் சொல்கிறார்கள்.. அதாவது தங்கள் கணவர் தான் பூமியிலேயே கனிவானவர் என்றும் மிகவும் அக்கறையுள்ள மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து பெண்களுமே தங்கள் கணவர் போதிய நேரத்தைச் செலவிடுவதாகச் சொன்னது தான் பெரிய ஆச்சரியம்..

ஷெட்யூல் போட்டு வாழும் மனைவிகள்
8 மனைவிகளும் நான்கு பெட் ரூம்களில் தூங்குகிறார்கள்.. அதாவது ஒரு ரூமில் இரண்டு மனைவிகள் தங்குவார்களாம்.. அவருக்கு ஏற்கனவே முதல் மனைவி மூலம் ஒரு மகன் இருக்கிறார்.. மேலும், அன்றைய தினம் கணவருடன் இருப்பது யார் என்பதை முடிவு செய்யத் தனியாக ஷெட்யூல் கூட போட்டுள்ளனராம். இந்த ஷெட்யூல் அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் கணவருடன் இருப்பார்களாம்.. இப்போது அவர்களில் இரண்டு மனைவிகள் கர்ப்பமடைந்துள்ளனர். இதனால் மற்ற 6 பேரும் இப்போது ஷெட்யூல் போட்டு கணவருடன் இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் புலம்பல்
இங்குப் பெரும்பாலானோருக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில்லை என்றே சண்டை வரும். ஆனால், இவர்களால் மட்டும் எப்படி பலரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று சாபம் கொடுக்கும் அளவுக்கு புலம்பி தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்.. அதேநேரம் பலதரப்பட்ட மனம் என்பது மனித ஒழுக்கத்திற்கு எதிரானது என்ற விமர்சனமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications