ஐபோன் விலை 7.5 லட்சமா.. இந்தியாவில் பரவாயில்ல போலயே! இந்த நாட்டில் விலையை கேட்டால் தலையே சுத்துது
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்ட ஐபோன் 15 விலையைக் கேட்டால் தலையே சுற்றும் நிலையில், பாகிஸ்தானில் இந்த ஐபோன் விலை 7 லட்சத்திற்கு விற்பனையாவது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
என்னதான் மற்ற மொபைல் நிறுவனங்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு மொபைல் என்ற ரேஞ்சுக்கு மொபைல் போன்களை வெளியிட்டாலும் கூட ஆப்பிளின் ஐபோன்களுக்கு அவை ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் புது ஐபோன் மீதே அனைவரது கவனமும் குவிந்து இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் செப். மாதம் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடும். அதன்படி கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது. Apple Wonderlust விழாவில் ஐபோன்களை வெளியிட்டனர்.
ஐபோன் 15: இந்த ஐபோன் 15இல் வரும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட இந்த ஐபோன் 15இல் 48 மெகா பிக்ஸச் கேமரா இருக்கிறது. மேலும், ஏ16 பயானிக் சிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என்று மூன்று வேரியண்ட்களில் வெளியாகும் இந்த ஐபோன், இப்போது ஐஓஎஸ் 17இல் இயங்குகிறது. மேலும், இந்த ஐபோன்களில் முதல்முறையாக டைப் சி சார்ஜிங் வசதி இடம் பெற்றிருக்கிறது.
வழக்கம் போல ஐபோன், ஐபோன் பிளஸ், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் ப்ரோ என 5 மாடல்களில் ஐபோன்கள் வெளியானது. இந்த மொபைல் ரிலீஸ் ஆகும் முன்பே இந்த ஐபோன் 15க்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெரும்பாலும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த நிலையில், முன்பதிவு தொடங்கியவுடன் பலரும் இதை ஆர்வத்துடன் ஆர்டர் போட்டனர். பல நாடுகளிலும் பொதுமக்கள் வரிசையில் இருந்து இந்த ஐபோன்களை வாங்கினர்.
பொதுமக்கள் ஆர்வம்: அதிலும் துபாய் போன்ற நாடுகளில் ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதுகிறது. அந்தளவுக்கு ஐபோன் 15 மீது பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஐபோனில் இருக்கும் வசதிகள் மீது எந்தளவுக்கு ஆர்வம் ஏற்படுகிறதோ.. அதே அளவுக்கு அதன் விலையும் நம்மை வாயைப் பிளக்க வைக்கும். இந்தாண்டு அமெரிக்காவில் ஐபோன் விலை உயர்த்தப்படவில்லை.
அமெரிக்காவில் ஐபோன் 15இன் விலை $799 (சுமார் ரூ. 66,208) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ளஸ் விலை $899 (சுமார் ரூ. 74,495) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபோன்கள் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மொபைல் முறையே $999 (சுமார் ₹82,781) மற்றும் $1,199 (சுமார் ₹99,354) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதே மாடல்களின் இந்தியா விலை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 15 மாடல் ரூ. 79,900இல் இருந்து தொடங்குகிறது ஐபோன் 15 பிளஸ் ₹89,900க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஐபோன் 15 ப்ரோ ₹1,34,900க்கும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ₹1,59,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தலையே சுத்துது: என்னது ஒரு மொபைல் 1.59 லட்ச ரூபாயா என்பதே இங்கே பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இதை நினைத்தே கவலைப்படாதீர்கள். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஐபோன் விலையைக் கேட்டால் உங்களுக்கு நிச்சயம் தலையே சுற்றிவிடும். அங்கே ஐபோன் ப்ரோ மேக்ஸ் 7.5 லட்ச பாக். ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கே 1 TB ஐபோன் 15 ப்ரோ வேரியண்ட் 7.5 லட்ச பாக். ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இது பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் எட்ட முடியாத விலையில் உள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பது ஒரு காரணம். மேலும், இறக்குமதி வரி தொடங்கிப் பல வரிகள் போடப்படுவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அது டிரெண்டாகி வருகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications