டிரம்ப் மீதான தாக்குதல்.. முன்கூட்டியே கணித்த சிம்சன்ஸ் கார்டூன்.. இந்த போட்டோவை பாருங்க புரியும்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே டிரம்ப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அமெரிக்காவில் வெளியாகும் சிம்சன்ஸ் கார்டூன் முன்கூட்டியே கணித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

டிரம்ப்: இதற்கிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் நேற்று சனிக்கிழமை நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் டிரம்ப் காதில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், அவர் ரத்தம் சொட்ட சொட்ட மேடையில் சரிந்தார். பிறகு சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
டிரம்ப் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மிக பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்சன்ஸ்: இதற்கிடையே டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பிரபல கார்டூன் நிகழ்ச்சியான தி சிம்சன்ஸ் முன்கூட்டியே கணித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிம்சன்ஸ் கார்டூன் இதற்கு முன்பும் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு டிரம்ப் அதிபராவது, தானாக இயங்கும் கார்கள், விஆர், எபோலா எனப் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் சிம்சன்ஸ் கார்டூன் கணித்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக சில கார்டூன் படங்களையும் நெட்டிசனகள் பரப்பி வருகிறார்கள். சிம்சன்ஸ் எப்படி இந்தளவுக்குத் துல்லியமாகக் கனித்துள்ளது என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிரம்ப் சொல்வது என்ன: முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஏதோ தவறு நடக்கப் போவது போல எனக்குத் தோன்றியது. முதலில் துப்பாக்கிச் சூடு சத்தம்... அதைத் தொடர்ந்து எனது தோலைத் தோட்டா கிழிப்பதை உணர முடிந்தது. ரத்தம் அதிகம் கொட்டியது. தக்க நேரத்தில் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் செயல்பட்டதால் அவர்கள் என்னைக் காப்பாற்றினர்.. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதை நம்ப முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
சுட்டது யார்: டிரம்ப் பேரணி நடந்த இடத்திற்கு அருகே இருந்த கட்டிடத்தின் மேலே இருந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த நபர் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் பதிலுக்குச் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிய வந்தது. அவர் எதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது தெரியவில்லை. இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications