Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதய துடிப்பே நின்னு போச்சு.. 205 அடி உயரம்.. அப்படியே நின்ற ரோலர் கோஸ்டர்! அடுத்து நடந்த பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரபல பூங்கா ஒன்றில் சுமார் 205 அடி உயரத்தில் திடீரென ரோலர் கோஸ்டர் நின்றுவிட்டது. அதன் பிறகு அங்கு நடந்த சம்பவம் தான் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நாம் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிப் போனோம். அப்போது வீடுகளை விட்டு யாருமே வெளியேற முடியாத ஒரு சூழலே நிலவி வந்தது. கொரோனா முடிந்த பின்னரே நிலைமை மெல்ல மாறியது.

 Netizens shocked as US Roller coaster freezes at 205-foot drop

இப்போது தான் மக்கள் வழக்கம் போல வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், சில இடங்கள் இன்னுமே கொரோனா காலத்தில் மூடப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை.

இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள ஓஹியோவின் சாண்டஸ்கியில் உள்ள சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்காவில் யாருமே எதிர்பார்க்காத மிகவும் மோசமான ஒரு சம்பவம் நடந்தது. இது அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் உயிரையே ஆபத்தில் தள்ளியுள்ளது.

ரோலர் கோஸ்டர்: அங்குள்ள ரோலர் கோஸ்டர் 205 அடி உயரத்தில் சென்ற போது அது அப்படியே மேலே நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்தோர் உறைந்த போனார்கள். மேக்னம் எக்ஸ்எல்-200 என்ற அந்த ரோலர் கோஸ்டர் தொழில்நுட்ப கோளாறால் 205 அடி உயரத்தில் அப்படியே நின்றுவிட்டது.

இதில் மிகப் பெரிய கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்றும் சின்னதாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே ரோலர் கோஸ்டர் இப்படி நடு வழியில் நின்றதாகப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்ன பிரச்சினை என்ற போதிலும் ரோலர் கோஸ்டரை உடனடியாக மீண்டும் இயங்க வைக்க முடியவில்லையாம். இதன் காரணமாகவே ரோலர் கோஸ்டர் 205 அடி உயரத்தில் அப்படியே நின்றுவிட்டது.

அடுத்து பகீர்: அதன் பிறகு நடந்த சம்பவம் தான் அனைவருக்கும் ஷாக். பொதுவாக இதுபோல விமானம் பாதியில் நின்றால் அதிகபட்சம் சில நிமிடங்களில் தானாக இயங்கும். இருப்பினும், இங்கே அது ரொம்ப நேரமாக அப்படியே இருந்தது. இதனால் அவர்கள் அங்கே மேலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அதில் இருந்தோர் பயத்தில் அலறியுள்ளனர்.

இருப்பினும், பூங்கா நிர்வாகத்தாலும் உடனடியாக ரோலர் கோஸ்டரை இயக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டனர். நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பூங்கா ஊழியர்கள் அவர்களைப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர். இந்த ரோலர் கோஸ்டர் அந்தரங்கத்தில் அப்படியே நிற்கும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

உயரமான கோஸ்டர்: மேக்னம் XL-200 என்ற இந்த ரோலர் கோஸ்டர் 1989 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 200 அடி உயரத்தைத் தாண்டி இருக்கும் இந்த ரோலர் கோஸ்டர் அப்போது உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது. ஆனால், அதன் பிறகு இதே சிடார் பாயிண்ட் பூங்கா இரண்டு முறை அதன் சொந்த சாதனையை முறியடித்து உயரமான ரோலர் கோஸ்டரை கட்டியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக சுமார் ஓராண்டிற்கு மேலாகக் கேளிக்கை பூங்காக்கள் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு திறக்கப்பட்டு மெல்ல இப்போது தான் மீண்டும் பயணிகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், ரோலர்கோஸ்டர் செயலிழப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

முன்னதாக சமீபத்தில் தான் விஸ்கான்சின் இதுபேலோ ஒரு ரைட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் பயணிகள் மணிக்கணக்கில் தலைகீழாகச் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கொஞ்ச நேரம் கழித்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல வட கரோலினாவில் உள்ள 325 அடி உயர ரோலர் கோஸ்டரில் வடிவமைப்பு சிக்கல் கண்டறியப்பட்ட நிலையில், அதுவும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+