உடலுறவு மூலம் பரவும் புதிய வைரஸ் பாதிப்பு.. "ரொம்பவே ஆபத்து.." எச்சரிக்கும் ஆய்வாளர்கள்.. பகீர் தகவல்
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு பாக்ஸ் வைரஸின் மிகவும் ஆபத்தான திரிபு ஒன்று உடலுறவு மூலம் பரவும் திறனைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நமது உலகில் சமீப காலங்களாகப் பல வித வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து பரவி வருகிறது. கடந்த 2019 இறுதியில் பரவி கொரோனா பாதிப்பு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. அதில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆகிவிட்டன.

உடலுறவு: இதற்கிடையே மங்கி பாக்ஸ் என்ற ஒரு வகை தொற்று குறித்து ஆய்வாளர்கள் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2022இல் இந்த மங்கி பாக்ஸ் தொற்று உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது. இருப்பினும், இது நல்வாய்ப்பாக கொரோனா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் முன்பே கட்டுப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் மங்கி பாக்ஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த மங்கி பாக்ஸ் திரிபை கிளேட் 1 என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த காலங்களிலும் இது மத்திய ஆப்பிரிக்காவில் ஆங்காங்கே பரவி இருக்கிறது. இருப்பினும், அவை பெரும்பாலும் பெரியளவில் பரவும் முன்பே கட்டுப்படுத்தப்படும். குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இது பரவுவதாக இருக்கும்.
புதிய திரிபு: இருப்பினும், சமீபத்தில் இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் திடீரென பலருக்கும் பரவியுள்ளது. அதுவும் குறுகிய காலத்தில் இந்த பாதிப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வைரஸின் பரவும் தன்மை மாறி இருப்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே அங்கு மோசமான பொருளாதார மற்றும் சுகாதார சூழல் நிலவுகிறது. காலரா போன்ற நோய்கள் அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் இந்த புதிய மங்கி பாக்ஸ் திரிபு அவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கடந்த காலங்களில் இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.. ஆனால், வரும் காலத்திலும் இது இப்படி இருக்கும் என சொல்ல முடியாது என எச்சரித்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள், அது வேகமாக பரவ வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள்.
உயிரிழப்பு கூட ஏற்படும்: தோலில் ஏற்படும் வலி, புண்களில் இருந்து திரவம் வெளியேறுவது உள்ளிட்டவை மங்கி பாக்ஸின் அறிகுறிகள். சில நேரங்களில் மங்கி பாக்ஸ் உயிரிழப்பையும் கட ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. குறிப்பாகக் காட்டு விலங்குகளும் மனிதர்களும் எங்கு அருகருகே இருக்கிறார்களோ அங்கெல்லாம் மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவும் எனக் கருதப்பட்டது. பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவாது எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த 2017இல் நைஜீரியாவில் முதல்முறையாக இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவது உறுதி செய்யப்பட்டது. அப்போதே இது உடலுறவு மூலம் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
எச்சரிக்கை: இருப்பினும், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் 2022ஆம் ஆண்டில் பல நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பரவியது. உடலுறவு மூலம் இது முக்கியமாகப் பரவியதாகச் சொல்லப்பட்டது.. அப்போது உலக சுகாதார அமைப்பு தொடர் நடவடிக்கையாலேயே இந்த பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது மங்கி பாக்ஸின் புதிய திரிபு உடலுறவு மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications