அமெரிக்காவின் ஹெச் 1பி விசாவில் புதிய விதிகள்.. இந்திய ஐடி ஊழியர்கள், மாணவர்களுக்கு பெரும் நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை வேலைக்கு எடுத்து வருகிறது. இதற்காக ஹெச்1 பி விசா பயன்படுகிறது. இந்த விசாவில் பல்வேறு கெடுபிடிகள் கட்டண உயர்வை டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இது ஹெச் 1 பி விசாவில் அதிகம் பயன்பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்த நிலையில் தற்போது விதிகளில் சில திருத்தங்களை செய்துள்ளது. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் விதமாக இந்த திருத்தம் அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பது என்ற பெயரில், குடியேற்ற விதிகளையும், விசா வழங்குவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகிறார்.

ஹெச்-1பி விசா கட்டணம்
வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனம், அந்த பணியாளருக்காக ஹெச்-1பி விசா கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி, கடந்த மாதம் 19-ம் தேதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த மாதம் 21- ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
ஹெச் -1பி விசா பெறும் வெளிநாட்டினரில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். எனவே, இந்த கட்டண உயர்வு இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், புதிதாக விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும் என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
விசா கட்டண உயர்வை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், விசா வகைப்பாடை மாற்றுவதற்கும் கட்டண உயர்வு செலுத்த வேண்டுமோ என்று நிறுவனங்களிடையே அச்சம் நிலவியது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஜனாதிபதி டிரம்ப் பிரகடனத்தில் திருத்தம் செய்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைப்பிரிவு வெளியிட்டது.
யாருக்கெல்லாம் பொருந்தாது
அதில் ஹெச் -1பி விசா கட்டண உயர்வு, முன்பே வழங்கப்பட்டு தற்போது செல்லுபடியாகக்கூடிய ஹெச்- 1பி விசாக்களுக்கு பொருந்தாது. செப்டம்பர் 21- ம் தேதி அதிகாலைக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களுக்கும் பொருந்தாது.
தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர், அமெரிக்காவுக்கு வருவதையோ, அமெரிக்காவுக்கு வெளியே பயணம் செய்வதையோ அதிபரின் அறிவிப்பு தடுக்காது. அதேபோல அமெரிக்காவை விட்டு வெளியேறாமல், விசா வகைப்பாட்டை மாற்றிக் கொள்பவர்களுக்கும் பொருந்தாது. எடுத்துக்காட்டாக மாணவர் விசாவான எப்-1 விசாவை ஹெச்-1பி விசாவாக மாற்றுவதற்கு கட்டண உயர்வு பொருந்தாது.
ஐடி ஊழியர்களுக்கு பயன் அளிக்கும்
அமெரிக்காவில் தங்கியிருந்தபடி, தங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரும் விண்ணப்பங்களுக்கும் பொருந்தாது. ஒருவேளை அவர்களது கோரிக்கை தகுதியற்றது என்று அமெரிக்க குடியேற்ற பிரிவு நிராகரித்தால், அவர்கள் கட்டண உயர்வை செலுத்த வேண்டி இருக்கும். அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்களுக்காக விண்ணப்பிக்கப்படும் ஹெச்-1பி விசாவுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஹெச் 1 பி விசாவில் உள்ள விதிகள் தளர்வு இந்திய மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கிட்டத்தட்ட 3,00,000 இந்திய ஊழியர்கள் ஹெச் 1 பி விசா பெற்று பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் டெக்னாலஜி மற்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸில் பணியாற்றுபவர்கள் ஆவர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications