அட ஆச்சரியமாக இருக்கே! அதிகம் படித்தவர்கள்தான் எப்போதும் இளமையா இருக்காங்கலாம்! புது ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: விரைவாக வயதாவதற்கும் நமது கல்விக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நம் அனைவருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும்.. மெதுவாக வயதாக வேண்டும் என்ற விருப்பம் இருக்கவே செய்யும். இதை அடைய நாம் பல ஆய்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.

ஆய்வு: இதற்கிடையே அதிகம் படித்தவர்கள் மற்றவர்களை விட மெதுவாக வயதாகி, நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. JAMA Network Open என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் அதிகம் படித்தவர்கள் விரைவாக உயிரிழக்கும் ஆபத்து குறைவு என கூறப்பட்டுள்ளது. மேலும், முதுமையடையும் வேகமும் குறைவாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வயதாகும் செயல்முறைக்கும் கல்விக்கும் இடையே உள்ள தொடர்பையும் கண்டறிய நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும். இது குறித்து நியூ யார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மூத்த ஆராய்ச்சியாளர் டேனியல் பெல்ஸ்கி கூறுகையில், "பொதுவாக அதிக கல்வியறிவு பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீண்ட காலமாகவே நமக்கு தெரியும். அதை அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபித்துள்ளோம்.
ஆனால் அது எப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிவதில் பல சவால்கள் உள்ளன. கல்வி நமது ஆயுளை எப்படி அதிகரிக்கும் என்பதைக் கண்டறியவே இந்த ஆய்வு" என்றார்.
எந்தளவுக்கு தொடர்பு இருக்கு: ஒவ்வொரு இரண்டு வருடப் பள்ளிப்படிப்பும் 2 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை முதுமை வேகத்தைக் குறைப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மொத்தத்தில், உயர்கல்வி பெற்ற ஒருவர் சராசரியாகப் படித்த நபருடன் ஒப்பிடும் போது முன்கூட்டியே உயிரிழக்க 10 சதவீதம் வரை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
ஃப்ரேமிங்ஹாம் ஹார்ட் ஸ்டடியில் இருந்து தகவல்களை ஆய்வாளர்கள் இதற்குப் பயன்படுத்தியுள்ளனர். இது 1948இல் தொடங்கப்பட்ட ஒரு விரிவான ஆய்வாகும். இதில் ஃபிரேமிங்ஹாம், மாசசூசெட்ஸ் பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை ஆய்வாளர்கள் நீண்ட காலமாகக் கண்காணித்து உள்ளனர். அவர்கள் வயதான விகிதத்தை அளவிட மரபணு தரவுகளை ஆய்வு செய்தனர். அதாவது ஒருவர் எந்தளவுக்கு வயதாகிறார் என்பதைக் கண்டறிய மரபணு சோதனையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதை அவர்களின் படிப்புடன் ஒப்பிட்டு இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். குடும்பங்களுக்குள் கல்வி பின்னணி மற்றும் நிதி எனப் பலவற்றை ஆய்வு செய்து இந்த ஆராய்ச்சியை நடத்தி முடித்துள்ளனர். குடும்பங்களுக்கு இடையே எந்தளவுக்கு கல்வியில் வேறுபாடுகள் இருக்கிறதோ அந்தளவுக்கு அவர்கள் வயதாகும் வேகமும் மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications