டிரம்பிற்கு உள்நாட்டிலேயே பயங்கர எதிர்ப்பு.. "வெனிசுலாவில் செய்தது மாபெரும் தவறு.." பாயும் மம்தானி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பெயரில் அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கைகளை நியூயார்க் மேயர் மம்தானி கடுமையாகச் சாடியுள்ளார். இது தவறான ஒரு செயல் என்றும் போர் நடவடிக்கைக்குச் சமமானது என்றும் சாடியுள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்கப் படைகள் திடீரென வெனிசுலா தனது தாக்குதல் நடத்தியது. வெனிசுலா நாட்டில் இறங்கிய அமெரிக்கப் படைகள் அந்நாட்டின் அதிபர் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தது. அவர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவில் அவர்கள் மீது வழக்கு நடைபெற உள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் டிரம்பின் இந்தச் செயலுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மம்தானி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கைது செய்ததற்கு நியூயார்க் நகர மேயர் மம்தானி, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் நேரடியாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த ஒருதலைப்பட்சத் தாக்குதலைப் போர் நடவடிக்கை என்று அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
எதிர்ப்பு
மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் மீதான வழக்குகள் நியூயார்க் தெற்கு மாவட்டத்தில் தான் நடைபெற உள்ளது. இதற்காக அவர்கள் நியூயார்க்கிற்கு தான் அழைத்து வரப்படுகிறார்கள். இந்தச் சூழலில் தான் மம்தானி இப்படியொரு கருத்தைக் கூறியிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் வெனிசுலாவில் நிலவரம் மற்றும் மதுரோவின் கைது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மாம்டானி, "நான் அதிபர் டிரம்ப்பை அழைத்துப் பேசினேன். நேரடியாகவே எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். இது தவறானது என்று டிரம்பிடமே கூறினேன்" என்றார். அதேநேரம் டிரம்ப் இதற்கு என்ன பதிலளித்தார் என்பதைக் கூறி மம்தானி மறுத்துவிட்டார்.
கடந்தாண்டு நியூயார்க் மேயர் தேர்தலில் வென்ற மம்தானி, சமீபத்தில் தான் மேயராக பதவியேற்றார். மம்தானி பதவியேற்று இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா ரணுவ நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவி நியூயார்க் நகரத்தில் தான் காவலில் வைக்கப்படுகிறார்கள் என்பதால்.. இது தொடர்பாக மம்தானிக்கு நேற்று நிர்வாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
போர் நடவடிக்கை
அதைத் தொடர்ந்து மம்தானி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இது ஆட்சி மாற்றத்திற்கான வெளிப்படையான முயற்சி.. இது நியூயார்க் நகரத்தில் வாழும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து நியூயார்க் மக்களையும் பாதிக்கிறது.. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது ஒரு போர் நடவடிக்கைக்குச் சமமானது.. இது கூட்டாட்சி மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும்.
பாதிக்கும்
இந்த வெளிப்படையான முயற்சி.. வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டுமல்ல, இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டவர்கள் உட்பட நியூயார்க் மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு நியூயார்க் குடிமகனின் பாதுகாப்புமே எனது முதன்மை கவனம். நியூயார்க் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிலைமையைக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
மம்தானிக்கும் டிரம்பிற்கும் எப்போதுமே ஆகாது. மம்தானி நியூயார்க் தேர்தலில் போட்டியிட்ட போதே டிரம்ப் அவரை கடுமையாக எதிர்த்தார். மம்தானி வென்றால் நியூயார்க் நகருக்கு வழங்கப்படும் பெடரல் அரசின் நிதியை முடக்கிவிடுவேன் எனக் கூட டிரம்ப் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!











Click it and Unblock the Notifications