பிளானே வேற! போருக்கு ரெடியாகும் சீனா! அவங்க செய்வதை எல்லாம் பாருங்க உங்களுக்கு புரியும்! நிக்கி ஹேலி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் சீனா அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய- அமெரிக்கக் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி, சீனா போருக்கு ரெடியாகி வருவதாகவும் கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். அதன்படி அங்குக் கடந்த 2020இல் நடந்த தேர்தலில் டிரம்பை ஜோ பைடன் வீழ்த்தினார். அங்கு அடுத்தாண்டு நடக்கும் தேர்தலுக்கு இப்போது பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.

அங்கு ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேநேரம் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் தொடங்கி பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்படிப் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் முக்கியமானவர் இந்திய- அமெரிக்கக் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி.
நிக்கி ஹேலி: இதற்கிடையே சமீபத்தில் அங்குள்ள நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிக்கி ஹேலி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். அமெரிக்காவைத் தோற்கடிக்கச் சீனா அரை நூற்றாண்டாகச் சதி செய்து வருகிறது என்று கூறிய அவர், சில விஷயங்களில் சீன ராணுவம் ஏற்கனவே அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இணையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "நாட்டின் வலிமையும் பெருமையும் நமது தேசியத்திற்கு ரொம்பவே முக்கியம்.. சீனா என்றும் நமக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அவர்கள் நம்மைத் தோற்கடிக்க அரை நூற்றாண்டாகப் போராடி வருகின்றனர். ஏற்கனவே உற்பத்தித் துறையில் அமெரிக்காவின் வேலைகளைச் சீனா எடுத்துக் கொண்டது. இதன் மூலம் அவர்கள் நமது வர்த்தக ரகசியங்களை அபகரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்குப் போட்டி: மருந்துகள் முதல் அதிநவீன தொழில்நுட்பம் வரை பல தொழில்களில் அவர்கள் நம்மைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இடத்தில் இருந்து சீனா உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற கனவு அவர்களிடம் இருக்கிறது.
சீனா தனக்கான நோக்கங்களில் தெளிவாக உள்ளன. அவர்கள் ஆசியாவைத் தாண்டி மற்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை அச்சுறுத்த முயல்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் மிகப் பெரிய அதிநவீன ராணுவத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு பிரிவில் சில குறிப்பிட்ட துறைகளில் அவர்கள் அமெரிக்காவுக்கு இணையாக வந்துவிட்டனர்.
போருக்கு ரெடியாகும் சீனா: மற்ற துறைகளிலும் நம்மை வீழ்த்த ஆரம்பித்துவிட்டனர். சீனத் தலைவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் உளவு பலூன்களை நம் நாட்டிற்கு மேல் அனுப்புகிறார்கள்.. கியூபாவில் நமது நாட்டை நோக்கி கடற்கரையில் உளவு பார்க்கவும் ஒரு தளத்தைக் ரெடி செய்கிறார்கள். சீனாவைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் இப்போது ஒரு போருக்கு ரெடியாகிறார்கள். அதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்" என்று அவர் பேசினார்.
தொடர்ந்து தனது பொருளாதார திட்டம் குறித்துப் பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிதி சுதந்திரம் அளிப்பதே தனது நோக்கம் என்றும் அதற்குப் பல திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரியை நீக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசின் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications