நிலவில் லேண்டிங் இல்லை.. மறுபக்கம் போகும் விண்வெளி வீரர்கள்.. 10 நாட்களும் செய்யப்போவது என்ன?
சென்னை: 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணத்தை மனிதர்கள் தொடங்கியுள்ளனர். நாசாவின் ஆல்டமிஸ் திட்டத்தின் கீழ் இந்த பயணம் அமைந்துள்ளது. நிலவில் தரையிறங்காமல் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளது. இவர்கள் சந்திர மண்டலத்தின் தாழ் விண்வெளி பகுதிக்கு சென்று என்ன மாதிரியான ஆய்வை செய்ய உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நூறு முதல் இரண்டாயிரம் கிமீ உயரம் வரை பூமியை சுற்றியுள்ள பகுதி தான் தாழ் விண்வெளி பகுதியாக கருதப்படுகிறது. 1972 டிசம்பரில் அபோல்லோ 17 நிலவிலிருந்து திரும்பிய பிறகு மனிதர்கள் யாரும் தாழ் விண்வெளியை தாண்டியது இல்லை. இன்று நாசாவால் விண்வெளியில் ஏவப்பட்டு இருக்கும் ஆர்டெமிஸ் II 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மனிதர்களை ஏந்தி அந்த எல்லையை கடந்து செல்ல இருக்கிறது.

தரையிங்க போவது இல்லை
* விண்ணுக்கு சென்றுள்ள வீரர்கள் 10 பேரும் சந்திரனில் தரையிங்க போவது இல்லை. சந்திரனை சுற்றி வரவும் மாட்டார்கள். மாறாக நிலவின் மறுபுறம் சென்று, மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.
* நிலவுக்கு சென்றுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள விக்டர் க்ளோவர் என்பவர் பைலட்டாக இருப்பார். விண்கலத்தை இயக்கம் பொறுப்பு இவருடையதே. ஏவூர்தி இயக்கத்தை இவரே கையாள உள்ளார்.
* விண்ணில் ஏவப்பட்ட முதல் 15 முதல் 20 நிமிடங்களில் விண்கலம் விண்வெளிக்கு சென்றுவிடும். நிலவை நோக்கிய பாதையை அடைந்ததும், ஓரியன் விண்கலத்தை விண்வெளி வீரர்கள் இயக்கி சோதனை செய்வார்கள். புவி அருகாமையில் இந்த சோதனை நடைபெறும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், விண்கலம் பூமிக்கு திரும்பி விடலாம்.
நிலவின் மறுபக்கம் சென்று
* 2-வது நாளில் விண்கலத்தில் உள்ள ஏவூர்தி இயக்கப்படும். ஏவுர்தியில் கிடைக்கும் ஆற்றல், ஓரியனை நிலவை நோக்கி உந்தி தள்ளும். இந்த கட்டத்தை எட்டிவிட்டால் நிலவை வட்டமிட்ட பிறகே பூமிக்கு திரும்ப முடியும். ஏனெனில் இந்த பயணம் அனைத்தும் நிலவின் ஈர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டும் இயங்க இருக்கிறது.
* விண்கலம் ஏவப்பட்ட 6-வது நாளில் ஓரியன் விண்கலம், சந்திரனின் மறுபக்கம் விண்கலம் வளைந்து செல்லும். நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 6,400 முதல் 9,600 கிலோமீட்டர் தூரத்துக்குள் விண்வெளி வீரர்கள் வருவார்கள்.
* சந்திரனின் மறுபக்கத்தை பூமியில் இருந்து இதுவரை பார்க்க முடியவில்லை. சந்திரனின் இந்த மறைந்த பகுதியை விண்வெளி வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி வீரர்கள் நிலவின் மறுபக்கத்தை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பார்கள்.
எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?
* இந்த சாதனை பயணத்தில் இது மிகவும் சவாலான கட்டமாக உள்ளது. ஏனெனில் இந்த தருணத்தில் பூமியில் இருந்து ரேடியோ தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். சுமார் 30 முதல் 50 நிமிடங்கள் துண்டிக்கப்படும். அப்போது குழுவினர் முழுவதும் தங்களின் திறமையை நம்பியே செயல்படும் நிலை வரும்.
* மறுபக்கத்தில் ஆய்வுகளை முடித்த பிறகு மீண்டும் பூமியை நோக்கி விண்கலம் திரும்பும். ஓரியன் விண்கலம் வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும். இதனால், வெப்பம் மற்றும் அழுத்தம் கடுமையாக ஏற்படும்.
* பூமியை நெருங்கியதும் பாரசூட்டுகள் திறக்கும். கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரையிறங்க உள்ளது. அங்கு தயாராக இருக்கும் குழுவினர் விண்வெளி வீரர்களை மீட்டு வருவார்கள்.
-
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications