இந்தியர்களை வேலைக்கு எடுக்காதீங்க.. கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை எச்சரிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்திய தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் பணியாளர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலக அளவில் டெக் துறையில் மிகப்பெரும் ஜாம்பவான்களாக திகழும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்திய பணியாளர்களை தவிர்க்க வேண்டும்
அதாவது, அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், சீனாவில் ஆலைகளை நிறுவி, இந்திய டெக் ஊழியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக அமெரிக்காவில் வேலையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஏஐ தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதவது:-
தொழில்நுட்பத் துறையின் உலகளாவிய அணுகுமுறை அமெரிக்கர்களை புறக்கணிக்கிறது. சில பெரிய நிறுவனங்கள் அமெரிக்க சுதந்திரத்தின் பலனைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்துள்ளன. "அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்திய தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் பணியாளர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததும் நடந்தது. அந்த நாட்கள் எல்லாம் தற்போது முடிந்துவிட்டன. அமெரிக்காவின் நலனுக்கான அணுகுமுறையை நோக்கி மாற வேண்டியுள்ளது" என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஊக்குவிக்க மூன்று புதிய நிர்வாக உத்தரவுகளை அறிவித்தார்.
அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை
அதாவது, அமெரிக்கர்களை முன்னிலைப்படுத்தும் வகையில், "பந்தயத்தில் வெற்றி" என பெயரிடப்பட்ட இந்த திட்டம், செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்றும், தேசபக்தி தேவை என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார். மேலும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய தடைகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்
அமெரிக்க அதிபரக கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தேவையில்லாத செலவுகளை குறைப்பேன் எனவும் பேசி வந்தார். அதிபராக பொறுப்பேற்றதும் முதல் வேளையாக பல்வேறு நாடுகளுக்கும் அதிரடியாக வரி விதித்தார்.
பரஸ்பர வரி விதித்த டிரம்ப்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்றினார். பரஸ்பர வரி என்ற பெயரில் கடுமையான வரியை விதித்து சர்வதேச அளவில் டிரம்ப் வரி பதற்றத்தை ஏற்படுத்தினார். தற்போது சில நாடுகளுடன் வரி ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகிறார். இப்படி தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் டிரம்ப், அமெரிக்க நலன்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறி வருகிறார்.
இத்தகைய சூழலில்தான், செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இந்தியா உள்பட வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக பேசியிருக்கிறார். கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் இந்திய ஐடி ஊழியர்கள் பலரும் பணியாற்றி வரும் நிலையில், டிரம்ப் டெக் நிறுவனங்களை எச்சரிக்கும் விதமாக மேற்கொண்ட கருத்தை கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications