நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன்
வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் பதிலடி கொடுக்ககூடும் என்று கருதப்படும் நிலையில், டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஈரான் -இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல்கள் நடப்பதால், போர் நிறுத்தம் நீடிக்குமா? என எண்ணும் அளவுக்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கடும் கோபம் அடைந்த ஈரான், நேற்று திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

நெதன்யாகுவுக்கு வேற சாய்ஸ் இல்லை - டிரம்ப்
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருப்பதால் இதற்கு பதிலடி கொடுக்க பெஞ்சமின் நெதன்யாகும் தீவிரம் காட்டினார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் பலத்த பின்னைடைவு சூழல் ஏற்பட்டது. இந்த பதற்றத்திற்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நெதன்யாகுவுக்கு போர் நிறுத்தத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை. நான் தான் முடிவுகளை எடுக்கிறேன். அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுக்கிறேன். அவர் முடிவுகளை எடுக்கவில்லை. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மாற்றாது. ஈரானின் தாக்குதல் ஒப்பந்தத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.
பதிலடி கொடுக்க வேண்டாம் என சொன்ன டிரம்ப்
முன்னதாக, பெஞ்சமின் நெதென்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகையில், ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. அச்சுறுத்தலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தனது மேற்கு வான் எல்லையையும் ஈரான் மூடியது.
எங்கள் பதிலடி விரிவானதாக இருக்கும்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடருமானால், எங்களின் பதிலடி மிகவும் விரிவானதாக இருக்கும். அது பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகள் அனைத்தையும் உள்ளடக்கும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications