ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப்
வாஷிங்டன்: பேச்சுவார்த்தை நடத்த, இந்த உலகத்தில் தன்னைவிட சிறந்த ஆள் வேறு யாருமே கிடையாது என்பதை, டிரம்ப் அடிக்கடி சொல்லி வருகிறார். அப்படித்தான் தற்போது ஈரான் விஷயத்திலும், அவர் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அதாவது, ஈரானின் உச்ச தலைவராக என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்.. நான்தான் வேண்டாம் என சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். டிரம்ப் இந்த கருத்தை ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.

டிரம்ப் பேசியது என்ன?
"ஈரான் தலைவர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மக்கள் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் அதை வெளியில் சொல்ல மறுக்கிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து, 'உங்களையே எங்கள் அடுத்த உச்ச தலைவராக மாற்றி விடுகிறோம்' என்று கூடச் சொன்னார்கள். ஆனால், எனக்கு அந்த வேலை வேண்டாம், நன்றி என நான் கூறிவிட்டேன்" என கூறியிருக்கிறார். அவரது இந்த பேச்சுதான் தற்போது வேர்ல்ட் பேமஸ்!
அடித்துவிட்ட டிரம்ப்
டிரம்ப் எது பேசினாலும் அதை சர்வதேச அளவில் ட்ரோல் மெட்டிரியலாக மாறிவிடுகிறது. அப்படித்தான் இந்த சுப்ரீம் லீடர் கருத்தும் மாறியிருக்கிறது. யாராவது எதிரி நாட்டு தலைவரை, தங்கள் நாட்டின் தலைவராக பதவியேற்க ஆசைப்படுவார்களா? அப்படி ஆசைபட்டார்கள் என்று சொன்னது மட்டுமல்லாது, மக்களுக்காக ஈரான் தலைவர்கள் பயப்படுகிறார்கள் என்றும் டிரம்ப் அடித்து விட்டிருக்கிறார்.
ஈரான் மக்கள் குறித்த நிலைப்பாடு
அப்படியெனில், இன்னமும் அந்நாட்டு மக்கள் காமெனி தலைமையிலான ஆட்சியைதான் விரும்புகிறார்கள் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்புறம் எதுக்கு? ஈரானில் மக்களாட்சி வரணும், ஆட்சி மாற்றம் தேவை என்றெல்லாம் சொல்லி தாக்குதல் நடத்த வேண்டும் என்று லாஜிக்கான கேள்வி எழுகிறது. ஈரானை தாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் சொல்லும் காரணங்கள்தான் இது. ஈரான் மக்கள் ரொம்பவும் வேதனைப்படுகிறார்கள். எனவே அந்த மக்களுக்கு சுதந்திரத்தை தருவோம் என்று சொல்கிறார்கள்.
கலாய்த்த ஈரான்
அப்படியும் சொல்ல வேண்டியது, இப்போ வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சொல்ல வேண்டியது. ஆக மொத்தத்தில், சர்வதெச அளவில் தனது கை ஓங்கியிருக்க வேண்டும் என்றுதான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது. டிரம்பின் பேச்சு குறித்து பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், டிரம்ப் தனக்கு தானே பேசிக்கொள்கிறார் என்று கலாயத்திருக்கிறது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்!












Click it and Unblock the Notifications