பெற்ற மகள் vs தங்கை.. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சோதனை.. வெடிக்க போகும் யுத்தம்
பியோங்க்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தை பற்றி ரகசியம் காத்து வந்த நிலையில் தற்போது தன் மகளை பொதுவெளியில் அறிமுகம் செய்து வருகிறார். தற்போது அதிகாரமிக்க பதவியில் உள்ள கிம் ஜாங் உன் சகோதரியான கிம் யோ ஜாங் தான் வடகொரியாவில் அடுத்து ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போகிறார் என பேசப்பட்ட நிலையில், மகளை முன்னிறுத்த தொடங்கியிருப்பது தங்கை - மகள் இடையே அதிகார மோதலை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.
வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. கிம் ஜாங் உன் அதிபராக உள்ளார். கொரிய போருக்கு பிறகு கொரியா தீபகற்பம் வட கொரியா - தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. அப்போது முதல் தென் கொரியாவை கிம் ஜாங் உன் குடும்பத்தினரே ஆட்சி செய்து வருகிறார்கள்.

வட கொரியா அதிபர்
தந்தை மறைவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கிம் ஜாங் உன் 2011 ல் பிடித்தார். வடகொரியா எப்போதுமே சர்வதேச அளவில் ஒரு தனிமைப்பட்ட நாடாகாவே உள்ளது. அந்த நாட்டில் கடுமையான சட்ட திட்டங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருவதாக தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அமெரிக்காவுடன் மோதல், தடையை மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என அடாவடி செயலில் ஈடுபட்டு வரும் வடகொரியா, தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகத்திற்கு தெரியபப்டுத்துவது இல்லை. பெரிய இரும்புத்திரை மூடியது போல அந்த நாடு உள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்
கொரிய மக்கள் வெளிநாட்டு படங்களை, வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அதேபோல சிறிய தவறுகளுக்கு கூட கொடூர தண்டனைகள், சிகை அலங்காரம், உடை என அனைத்திலும் அரசு என்ன சொல்கிறதோ, அதையே செய்ய வேண்டும் என்ற விதி என வடகொரியா ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலவே உள்ளதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களும் கொரிய உளவு அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியான கிம் யோ ஜாங்கும் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ளார். வடகொரியாவில் அடுத்து ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போவது இவர்தான் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது தனது மகளை முன்னிறுத்த தொடங்கியுள்ளார் கிம் ஜாங் உன்.
தனது குடும்பத்தை பற்றி ரகசியம் காக்கும் கிம் ஜாங் உன், முதல் முறையாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மகளை வெளியுலகத்திற்கு காட்டினார். 13 வயதே ஆகும் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ தற்போது வடகொரியாவில் நடைபெறும் முக்கிய ராணுவ கூட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளிலும் பங்கேற்க தொடங்கியுள்ளார்.
சகோதரிக்கும் - மகளுக்கும் இடையே மோதல்
இதனால், அடுத்த வாரிசாக தனது மகளை கிம் ஜாங் உன் முன்னிறுத்த தொடங்கியுள்ளதாக தென் கொரிய உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங்கிற்கும், மகள் கிம் ஜூ ஏவிற்கு எதிர்காலத்தில் மோதல் வெடிக்கலாம் என்று தென்கொரிய உளவு அமைப்புகள் கூறியிருக்கின்றன.
வடகொரியாவின் பழமைவாத மற்றும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தலைமை காரணமாக, ஒரு பெண் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் சியோல் வட்டார அதிகாரிகள் முன்பு சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், கிம் ஜூ ஏவின் தொடர்ச்சியான பொதுத் தோற்றங்கள் இந்த கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகார போட்டி ஏற்பட வாய்ப்பு
கிம் ஜாங் உன்னிற்கு பெரும் சவால் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்கிடமிருந்து வரலாம் என்று சொல்லப்படுகிறது. 38 வயதாகும் இவர், வடகொரியாவில் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படுகிறார். அவருக்கு வலுவான அரசியல் மற்றும் ராணுவ ஆதரவு உண்டு.
தற்போது, இவர் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவில் ஒரு மூத்த பதவியை வகித்து வருகிறார். முன்னாள் தென் கொரிய உளவுத்துறை அதிகாரி ராக் ஜாங் யில் வடகொரியா விவகாரம் குறித்து கூறுகையில், வடகொரியாவில் அதிகாரப் போட்டி "சாத்தியமே" என எச்சரித்துள்ளார்.
அதிகார யுத்தம் நடைபெற வாய்ப்பு
தனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று நம்பினால், தலைமைப் பதவியை அடைவதற்காக கிம் யோ ஜாங் தீவிரமாக முயல்வார் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஏனெனில் சர்வதேச அளவில் தனது பெயரை நிறுத்துவதில் கிம் யோ ஜாங் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார்.
தென்கொரியாவை விமர்சித்து கூட தனது பெயரில்தான் அறிக்கை வெளியிடுகிறார் என்று கூறியுள்ளார். இதனால் வரும் நாட்களில் வடகொரியாவில் அதிகார யுத்தம் நடைபெற்றாலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications