கொரோனா மட்டுமில்லை.. மங்கி பாக்ஸும் உருமாறுகிறது! அமெரிக்க ஆய்வாளர்கள் பகீர்.. ஆபத்தா? பரபர தகவல்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு அடுத்த தலைவலியாக உருவெடுத்துள்ளது.
வேக்சின், முன்னெச்சரிக்கை பணிகள் எனப் பலகட்ட நடவடிக்கைக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பே இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. அதிலும் கூட கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
இதற்கிடையே இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்று ஏற்படக் காரணமாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

மங்கி பாக்ஸ் பரவல்
இந்த மங்கி பாக்ஸ் வைரஸ் புதிய வகை நோய் இல்லை. இருப்பினும், இவை பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்படும். இருப்பினும், இப்போது இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு அதைத்தாண்டி பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. வெறும் சில வார இடைவெளியில் இந்த வைரஸ் சுமார் 20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மங்கி பாக்ஸ் இதுவரை இல்லாத நாடுகளிலும் கூட பரவி உள்ளதே இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

புதிய திரிபுகள்
இந்நிலையில், கொரோனா வைரஸ் போலவே இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பும் உருமாறி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மங்கி பாக்ஸின் இரு வேறு திரிபுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் இப்போது கண்டறியப்பட்டுள்ள பாதிப்புகளில் பெரும்பாலான பாதிப்புகள் ஐரோப்பாவில் பரவும் அதே வகை மங்கி பாக்ஸால் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், சில மாதிரிகள் வேறுபட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மே முதல் தான் மங்கி பாக்ஸ் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த இரு திரிபுகளும் கடந்த ஆண்டே அமெரிக்காவில் தலா ஒருவருக்கு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்போது
எனவே, எதிர்பார்த்ததை காட்டிலும் முன்னதாகவே மங்கி பாக்ஸ் பாதிப்பு அமெரிக்காவில் பரவ தொடங்கி இருக்கலாம் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், இப்போது நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்து, மங்கி பாக்ஸ் பரவல் குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியாது என்றும் மங்கி பாக்ஸ் பரவல் காலத்தை உறுதி செய்யக் கூடுதல் தரவுகள் தேவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து வைரஸ்களும் இதுபோல உருமாறுவது வழக்கமான ஒன்று தான என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Recommended Video

சமூக பரவல்
இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையத்தின் ஜெனிபர் மெக்விஸ்டன் கூறுகையில், "அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் வழக்குகள் முன்கூட்டியே பரவ தொடங்கி இருக்கலாம். ஆனால் இதுவரை அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றே நினைக்கிறேன். இருப்பினும், இன்னும் கூட பல பகுதிகளில் மங்கி பாக்ஸ் பரவல் இருக்கலாம். அது சமூக பரவலாகக் கூட மாறி இருக்கலாம். எனவே வரும் காலங்களில் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்" என்றார்.

எந்த நாடுகள்
கடந்த மே முதல் வாரத்தில் இந்த நோய் பரவ தொடங்கியது. அதன் பின்னர், வெறும் சில வார இடைவெளியில் இப்போது 27 நாடுகளில் சுமார் 780 பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும். பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

யாருக்கு அதிக பாதிப்பு
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. இப்போது கண்டறியப்படும் பல வழக்குகள் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கே பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications