அதிர்ச்சி.. தடுப்பூசி போட்டுக் கொண்ட நர்ஸ்.. கொஞ்ச நேரத்தில் சரிந்து மயங்கி விழுந்து.. பரபரப்பு!
தடுப்பூசி செலுத்தி கொண்ட நர்ஸ் மயங்கி சரிந்து விழுந்தார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட நர்ஸ் ஒருவர், கொஞ்ச நேரத்திலேயே செய்தியாளர்களின் சந்திப்பின்போது திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பலகட்ட டெஸ்ட்களுக்கு பிறகு, வெற்றி பெற்று இப்போது அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டென்னிசி பகுதியை சேர்ந்த டிஃப்னி டோவர் என்ற நர்ஸ், முதன் முதலாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
பின்னர் தனக்கு போடப்பட்ட அந்த ஊசி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென பாதியில் எழுந்து நின்றார்.. மைக் முன்னாடி தள்ளாடியபடியே நின்றவர் தன் தலையை பிடித்து கொண்டு, "ஐ ஆம் ஸாரி" என்று சொல்லியவாறே, அப்படியே மயங்கி கீழே சரிந்தார்.. இதையடுதுது அங்கிருந்தோர் பதட்டமடைந்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்பூசிக்கு இதுவரை கண்டனம் தெரிவித்து தடுப்பூசிக்கு எதிரான குழுவினர், நர்ஸ் கீழே விழுந்த வீடியோவை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு பேசி வருகிறார்கள்.. மேலும் அந்த தடுப்பூசி பாதுகாப்பனதல்ல என்றும் சொல்லி தங்கள் கொள்கைக்கு ஆதாரமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், டிஃப்னிக்கு உடம்பில் ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் அதனாலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்..
திடீரென உடம்பில் வலி, ஊசியை கண்டு பயம், அதிக சூடு, நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணங்களால் உடம்பில் ஒருவித விளைவுகள் ஏற்படும், ரத்தம், ஊசியை கண்டு பயப்படுபவர்கள்தான் இதுபோல மயங்கி விழுவார்கள், அந்த பிரச்சனை டிஃப்னிகுகம் இருந்ததால்தான் மயங்கிவிழுந்துள்ளார் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
அப்படி என்றால், இப்படி ஒரு நோயாளியை எதற்காக தடுப்பூசி போட தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தடுப்பூசிக்கு எதிரான குழுவினர், கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications