என்விடியா சிஇஓவுக்கு மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு? பறிபோகும் பதவி! தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்
வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹூவாங் மீது மேலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி பெண் ஒருவரிடம் திருமணம் தாண்டிய உறவில் அவர் இருந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், ஜென்சன் ஹூவாங்கை பதவியில் இருந்து நீக்க இயக்குநர்கள் குழு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்விடியா. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சீன உளவாளி பெண் என சந்தேகிக்கப்படும் பெண் அதிகாரி ஒருவருடன் தனக்கு இருந்த கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்டு இருந்தார்.

இன்னொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு
இதனால் டெக் உலகில் கொடி கட்டி பறக்கும் என்விடியா நிறுவனம் ஒரே நாளில் ஆட்டம் கண்டது. பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியை என்விடியா சந்தித்த நிலையில், பல ஆயிரம் கோடி இழப்பும் ஏற்பட்டது. சிங்கப்பூரை சேர்ந்த மெகா பீஸ்ட் என்ற நிறுவனத்தில் உயர் நிலை அதிகாரியாக பணியாற்றிய ஆலீஸ் ஹூவாங் என்ற சீன பெண்ணுடன் உறவில் இருந்த ஜென்சன் ஹூவாங்கிடம் என்விடியா இயக்குநர்கள் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, ஜென்சன் ஹுவாங், தனக்குக் கீழ் பணியாற்றும் நிறுவனத்தின் மூத்த பெண் அதிகாரி ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவரான கிம்பர்லி பவன் என்பவருடன் ஜென்சன் ஹூவாங்கிற்கு உறவு இருந்ததாக நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போனை துண்டித்து விட்டதாக
இதுபற்றி ஜென்சன் ஹுவாங்கிடம் கேட்கப்பட்ட போது, "நீங்கள் என்னிடம் நேரடியாகப் பேசக்கூடாது" எனக்கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி என்விடியா நிறுவனமும், கிம்பர்லி பவல் தரப்பில் இருந்தோ உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. எனவே இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா?
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவதால், ஜென்சன் ஹூவாங்கை பதவியில் இருந்து நீக்க என்விடியா இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இன்று இயக்குநர்கள் குழு கூட உள்ளதாகவும் அதில், ஜென்சன் ஹூவாங்கின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் ஜென்சன் ஹூவாங்க் பதவி நீக்கம் செய்யப்பட்டால் தலைமை பொறுப்புக்கு நிறுவனத்தில் வெற்றிடம் ஏற்படும். என்விடியா நிறுவனத்தில் அடுத்த தலைமை பொறுப்புக்கு வருபவர் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விரிவான திட்டம் இல்லை. எனவே, அவரை உடனடியாக நீக்குவது நிறுவனத்திற்கு பெரிய சவாலாகாவே இருக்கும் என்று அதிகாரிகள் மத்தியில் இருந்து வெளியாகும் தகவலாக உள்ளது.




Click it and Unblock the Notifications
