"செத்து போ.. அப்போ தான் எனக்கு நிம்மதி.." இந்திய அதிகாரியை பார்த்து என்விடியா ஜென்சன் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் குறித்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. அவர் பொதுவெளியில் எப்போதும் எளிமையான தலைவராகவே தன்னை அடையாளப்படுத்தி கொண்டாலும் நிறுவனத்தில் வேலை செய்த சிலர் அவரது இன்னொரு முகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை சொல்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை உலகின் மிக முக்கிய சிஇஓவாக இருந்தவர் ஜென்சன் ஹுவாங். ஆனால், இப்போது அவர் சர்ச்சை மீது சர்ச்சையில் சிக்கி வருகிறார். உளவாளி என்று சந்தேகிக்கப்படும் சீன பெண் தொழிலதிபர் உடனான கள்ள உறவு சர்ச்சையால் ஜென்சன் தனது சிஇஓ பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.

Nvidia India world

சர்ச்சை

இருந்த போதிலும், அவரை சுற்றியுள்ள சர்ச்சை குறைந்தபாடில்லை. மாறாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இத்தனை காலம் பொதுவெளியில் தன்னை எளிமையான சிஇஓவாக ஜென்சன் காட்டிக் கொண்டார். கருப்பு நிற லெதர் ஜாக்கெட், தனது எளிய பின்னணி குறித்த கதைகள், நிறுவனத்தின் வெற்றிக்கு ஊழியர்களே காரணம் என்ற பாராட்டு என அவரது பிம்பம் இருந்தது. ஆனால், நிறுவனத்திற்கு உள்ளே அவரது முகம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கூட்டங்களில் உயர் அதிகாரிகளை சக ஊழியர்கள் முன்னிலையிலேயே கடுமையாகத் திட்டுவது, அவமானப்படுத்துவது, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கோபத்தில் வெடிப்பது என ஜென்சன் நடவடிக்கைகள் இருந்ததாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 63 வயதான ஹுவாங்கின் இத்தகைய செயல்பாடுகளால், கூட்டங்களில் எப்போது திட்டு விழுமோ என்ற அச்சத்துடன் ஊழியர்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செத்து போ

கடந்த பிப்ரவரி மாதம், 30க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ரகசிய கூட்டத்திலும் ஜென்சன் இதுபோல தான் நடந்து கொண்டாராம். அப்போது என்விடியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜே புரியை ஹுவாங் கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்த கூட்டத்திலேயே ஜென்சன், "உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போக வேண்டும், அது இன்னும் மோசமாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் இறந்துவிட்டால் எங்கள் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும்" என்று ஹுவாங் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அப்போது புரி அமைதியாக இருந்ததாகவும், பின்னர் அவர் நிறுவனத்தில் மூத்த ஆலோசகர் பொறுப்புக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

முதல்முறை இல்லை

இந்த கோபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஹுவாங் அடிக்கடி கத்துவது நிறுவனத்தில் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் இந்தளவுக்கு பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜென்சனின் இந்த பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதேபோல கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற நேரக் கூட்டத்திலும் மூத்த விற்பனை அதிகாரி ஒருவரை ஜென்சன் அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. மற்றொரு கூட்டத்தில் முதன்முறையாக ஜென்சன் பங்கேற்ற மூத்த நிர்வாகி ஒருவரை பார்த்து, "வெளியே போ" என்று கத்தி திட்டியுள்ளார். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள என்விடியா தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகி ஒருவர் மீது ஹுவாங் தண்ணீர் பாட்டிலை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்களை பாராட்டும் எளிமையான தலைவர் என்ற பிம்பத்தை அவர் கட்டமைத்தாலும் உண்மையில் அவர் அப்படி இல்லை என்கிறார்கள். குறிப்பாக கருத்து வேறுபாடுகளை பொறுத்து கொள்ளாத முடியாத ஒரு தலைவராக ஜென்சன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+