கள்ளக்காதல் பற்றி பேசவேண்டாம்.. ஊழியர்களிடம் என்விடியா சிஇஓ சொன்னது என்ன? வழக்கம்போல் பணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்கின் கள்ளக்காதல் விவகாரம் உலகளவில் பேசும்பொருளாகி உள்ளது. ஆனால் அவரோ ஊழியர்களிடம் 2வது முறையாக மன்னிப்பு கேட்டுவிட்டு கள்ளக்காதல் பற்றி கேட்காதீங்க என்ற தொனியில் வழக்கம்போல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

nvida-ceo-again-aplogiesed-to-employees-during-a-meeting

என்விடியா என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மல்டிநேஷனல் டெக்னாலஜி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சிஇஓவாக ஜென்சன் ஹுவாங் செயல்பட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கினார். ஜென்சன் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் கள்ளஉறவில் இருப்பதாகவும், அந்த பெண் சீனாவின் உளவாளியாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதுமட்டுமின்றி ஜென்சன் ஹுவாங்கும் தனது கள்ளக்காதலை ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதாவும், மனைவிக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்ததோடு, ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இதைடுத்து கலிபோர்னியாவில் சாண்டா கிளாராவில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஜென்சன் ஹுவாங்க் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியதோடு, கள்ளக்காதல் பற்றிய கேள்விகளை தவிர்க்கும் வகையில் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மூடிய அறையில் கூட்டம் நடந்தது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஹுவாங் தனது தவறான செயலை குறிப்பிட்டு ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். ஆனால் அதுதொடர்பான வேறு எந்த விஷயத்திற்கும் அவர்பதில் சொல்லவில்லை. அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்ட உடனே வணிகம் சார்ந்த விஷயங்களில் அவர் கவனம் செலுத்தினார்.

முன்னதாக கடந்த 8 ம் தேதி ஜென்சன் ஹுவாங் தனது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி மன்னிப்பு கோரியிருந்தார். அதில், ''நான் செய்த காரியத்தை ஒரு மன்னிப்பால் சரிசெய்துவிட முடியாது என்பது எனக்கு தெரியும். எங்கள் குடும்பம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். காலப்போக்கில் உங்கள் நம்பிக்கையை என்னால் மீண்டும் பெற முடியும் என்றும் நம்புகிறேன்'' என வருத்தம் தெரிவித்து இருந்தார். அதேபோல் இன்றைய கூட்டத்திலும் அவர் தனது அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+