சீன உளவாளி மட்டுமில்லை.. சீனியர் பெண் அதிகாரி உடனும் "நெருக்கமாக" என்விடியா ஜென்சன்! வெளியான தகவல்
வாஷிங்டன்: உலகின் முன்னணி ஏஐ சிப் நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சை மீது சர்ச்சை வெடித்துள்ளது.. சீன தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடனான கள்ள உறவு குறித்த புகார் ஏற்கெனவே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது என்விடியாவின் மூத்த பெண் அதிகாரியான கிம்பர்லி பவலுடனும் அவருக்கு நெருக்கமான உறவு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிக பெரிய ஏஐ சிப் தயாரிப்பு நிறுவமான என்விடியா இருக்கிறது. உலகமே இப்போது ஏஐயை நோக்கி ஓடி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு பின்னால் உள்ள முக்கிய நிறுவனம் இந்த என்விடியா. அந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கும் சிப்கள் தான் ஏஐ சிப் நிறுவனங்களுக்கு மிக பெரிய பூஸ்ட்டை தருவதாக இருக்கிறது.

சர்ச்சை
அந்த நிறுவனத்தின் சிஇஓவான 63 வயதான ஜென்சன் ஹுவாங்கின் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சீனாவை சேர்ந்த உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது சர்வதேச அளவிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவரது பெர்சனல் வாழ்க்கை குறித்து இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 48 வயதான கிம்பர்லி பவல் என்ற மூத்த பெண் என்விடியா அதிகாரியான 48 வயதான கிம்பர்லி பவல் என்பவர் உடனும் கள்ள உறவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கிம்பர்லி பவல் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக என்விடியாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். அவர் இப்போது என்விடியா நிறுவனத்தின் சுகாதார தொழில்நுட்ப பிரிவின் துணை தலைவராக உள்ளார்.
யார் இவர்
கிம்பர்லி பவல் 2008ம் ஆண்டு என்விடியாவில் இயக்குநராக பணியில் சேர்ந்தார். அப்போது மருத்துவ படங்களை ஆய்வு செய்வதில் என்விடியாவின் ஏஐ சிப்களை பயன்படுத்துவதுவது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பொறியாளராகவும், தயாரிப்பு மேம்பாட்டு பிரிவிலும் பணியாற்றியுள்ளார். பின்னர் என்விடியாவின் கம்ப்யூட்டிங் சிப்கள் குறித்து அந்நிறுவனத்தை அணுகியபோது, அவரை என்விடியாவில் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.
2016ம் ஆண்டு மூத்த இயக்குநராக பதவி உயர்வு பெற்ற அவர், ஏஐ சார்ந்த தொழில் மேம்பாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார். 2017 இறுதியில் என்விடியாவின் சுகாதார துறை துணை தலைவராக உயர்ந்தார். தற்போது மருத்துவ படங்கள், மருந்து கண்டுபிடிப்பு சார்ந்த துறைகளுக்கான சாப்ட்வேர் தொழில்நுட்பங்களை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
என்ன நடந்தது
என்விடியாவின் ஆண்டு டெவலப்பர் மாநாடு கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஜென்சன் ஹுவாங்கும் கிம்பர்லி பவலும் நெருக்கமாக இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. என்விடியாவில் பணியாற்றிய ஐந்து பேரிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அந்த சம்பவத்தை ஒரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமானவர்
ஹுவாங்கின் பாதுகாப்பு அதிகாரிகள் இதை கவனித்து, வீடியோ எடுத்த நபரை தனியாக அழைத்து சென்றதாகவும், பின்னர் அவரிடம் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கிம்பர்லி பவல் திருமணமானவர் என்றும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஆனால், அவரது கணவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இப்படி சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹுவாங்கை சிஇஓ பதவியிலிருந்து நீக்குவது குறித்து நிர்வாகக் குழு ஆலோசிப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த செய்தி தொடர்பாக ஹுவாங், பவல் அல்லது என்விடியா என யாரும் எந்தவொரு கருத்தும் கூறவில்லை.


Click it and Unblock the Notifications
