பதவியை பறித்த கள்ளக்காதல்.. என்விடியா சிஇஓ பொறுப்பை ராஜினாமா செய்த ஜென்சன் ஹுவாங்
வாஷிங்டன்: கள்ளக்காதல் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ஜென்சன் ஹுவாங், என்விடியா சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை தொடர்ந்து அந்த பொறுப்பு என்விடியா நிறுவனத்தின் தற்காலிக சிஇஓவாக கோலேட் கிரெஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாக செயல்பட்டு வந்தவர் ஜென்சன் ஹுவாங். இவர் தைவான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர். இவரது என்விடியா நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாக கொண்டு செயல்படடு வருகிறது.
மல்டிநேஷனல் டெக்னாலஜி நிறுவனமான இந்த என்விடியா கம்ப்யூட்டருக்கான சிப்கள், 'கிராபிக்ஸ் புராஸஸிங் யூனிட் மற்றும் ஏஐ தொழில்நுட்ப கட்டமைப்புகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் என்விடியா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓமான ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கினார்.
இவர் சீனாவை சேர்ந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் கள்ளஉறவில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த பெண் சீன உளவாளி என்றும் கூறப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. அவர் சீன உளவாளி என்று ஜென்சன் ஹுவாங் கூறாவிட்டாலும் கூட தனது கள்ள உறவை ஒப்புக்கொண்டார். நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தனது மனைவியிடம் மன்னிப்பு கோரினார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ''ஜென்சன் ஹுவாங் திருமணத்தை கடந்த கள்ள உறவில் உள்ளார். நிறுவனத்தில் ஹெல்த்கேர் பிரிவின் துணை தலைவராக இருக்கும் கிம்பெர்லி பவல் உடன் கள்ளக்காதலில் இருக்கிறார்'' என கூறியது.
இந்த கள்ளக்காதல் சர்ச்சைகளால் என்விடியா போர்ட் உறுப்பினர்கள் அவரை பதவியில் இருந்து நீக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் ஜென்சன் ஹுவாங் தனது தலைவர், சிஇஓ பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து இந்த பொறுப்பில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கள்ளக்காதல் சர்ச்சையில் தனது பதவியை இழந்துள்ளார்.
ஜென்சன் ஹுவாங்கின் ராஜினாமாவை தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் செயல் துணை தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் இருக்கும் கோலேட் கிரெஸ் தற்காலிக சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்துக்கு முழுநேர சிஇஓ தேர்வாகும் வரை கோலேட் கிரெஸ் தற்காலிக சிஇஓவாக நிறுவனத்தை நடத்த உள்ளார்.
கோலேட் கிரெஸ் கடந்த 13 ஆண்டுகளாக என்விடியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் நிதி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். தற்போது நிறுவனத்தின் செயல் துணை தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் என்விடியா நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக 25 ஆண்டுகள் சிஸ்கோ, மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நிதித்துறையில் செயல்பட்டு வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
