"என் இதயமே நொறுங்கிவிட்டது.." வேதனையின் உச்சத்தில் ஒபாமா! பரபரக்கும் நெட்டிசன்கள்! என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல்கலைக்கழக சேர்க்கையில் இனத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதற்கு அந்நாட்டின் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் படிப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு முறை இருந்து வந்தது. கல்லூரிச் சேர்க்கையில் அவை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டன

அங்கே இனத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் இருந்த நிலையில், இட ஒதுக்கீடும் அதன் அடிப்படையில் வழங்கப்பட்டன. இருப்பினும், அங்கும் குறிப்பிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம்: ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள சேர்க்கை முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் இந்த பல்கலைக்கழகங்களின் சேர்க்கை திட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தமான சம பாதுகாப்பு விதியை மீறுவதாக உள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் உள்ள நிலையில், அவர்களில் 6 பேர் இன ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். இதனால் அங்கே இன அடிப்படையில் இட ஒதுக்கீடு இனி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அங்குள்ள குடியரசு கட்சியைச் சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஒபாமா வேதனை: இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த கொள்கைகள் தான், பல தலைமுறைகளாகப் புறக்கணிக்கப்பட்ட தன்னை போன்றவர்களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டார். அனைத்து மாணவர்களும், இன ரீதியான பாகுபாடு கட்டப்படாமல் வெற்றி பெற வாய்ப்பை வழங்க இந்தக் கொள்கைகள் அவசியம் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பாரபட்சமற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான முழுமையான பதில் இவை இல்லை. இருப்பினும், அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டுப் பல தலைமுறைகளாக விலக்கி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு நாங்கள் இதற்குத் தகுதியானவர்களே என்று நிரூபிக்கும் வாய்ப்பை இதுவே அளித்தது. உச்ச நீதிமன்றம் இப்போது இந்த தீர்ப்பை அளித்துள்ள நிலையில், நாம் நமது இலக்குகளை அடைய முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இதயம் உடைந்தது: அதேபோல ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, "தங்கள் எதிர்காலம் குறித்துப் புரியாமல் என்ன செய்யலாம் என யோசிக்கும் இளைஞர்களைப் பார்த்தால் என் இதயம் உடைகிறது. மாணவர்கள் முன்னேற்றத்திற்குச் சிறு ஏணி இதுபோல கொடுப்பது நல்ல விஷயம் தான். பள்ளிகள், பணியிடங்களில் சமத்துவத்தைக் கொண்டு வருவதில் இதுபோன்ற சட்டங்கள் முக்கியமாகத் தேவைப்பட்டது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் அங்குள்ள குடியரசு கட்சியினர் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த தீர்ப்பு அமெரிக்காவை உலகின் மற்ற நாடுகளுடன் போட்டியிட வைக்க உதவும் என்று கூறினார். மேலும் அங்குள்ள பல குடியரசுத் தலைவர்கள் இதை ஆதரித்தே தீர்ப்பு அளித்தனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications