அய்யோ! "217 முறை" கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
வாஷிங்டன்: ஒரு முறை கொரோனா தடுப்பூசி போடுவதற்கே பலரும் பயந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த முதியவர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கதிமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அவரது உடல் நலனில் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா? என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் பெருந்தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. உலக நாடுகளை ஒருசேர இந்த வைரஸ் முடக்கி போட்டது. சமூக இடைவெளி, முகக்கவசம், ஊரடங்கு என வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் படாத பாடு பட்டன.

பக்கத்து ஊருக்கு போகக் கூட பக்கத்து நாட்டிற்கு செல்வது போல கெடுபிடிகளை மக்கள் திண்டாடிப்போகினர். உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே கட்டுக்குள் வரத் தொடங்கியது. 2021 ஜனவரியில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவின் ஃபைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷில்டு தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும் பஙகாற்றின. கொரோனா வைரஸ் பல அலைகளாக உருவெடுத்ததால், இரண்டு, மூன்று டோஸ் வரை தடுப்பூசிகள் போடப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.
217 முறை தடுப்பூசி: எனினும் அறிவியல் பூர்வமாக இது 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை. ஒருமுறை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட ஒரு சிலர் சுணக்கம் காட்டியதையும் பார்க்க முடிந்தது. ஆனால், ஜெர்மனியில் ஒருநபர் இதுவரை மொத்தம் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டுள்ளாராம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஜெர்மனியின் மக்தேபர்க் நகரில் வசித்து வருபவர் 62 வயது முதியவர். இவர் கடந்த ஜூன் 2021 முதல் நவம்பர் 2023 வரை 29 மாத கால இடைவெளிகளில் 217 முறை கொரோனா தடுப்பூசிகளை போட்டு இருக்கிறார். எந்த ஒரு மருத்துவ பரிசோதனைக்காகவும் இப்படி தாறுமாறாக தடுப்பூசி போடவில்லை. தானாக விருப்பப்பட்டே இப்படி தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார்.
கொரோனா தொற்று இல்லை: 134 முறை முறைப்படி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த முதியவர் மீதமுள்ள 83 சுயமாகவே போட்டுள்ளாராம். அது போக 29 மாதங்களிலும் தொடர்ச்சியாக கொரோனா தனக்கு உள்ளதாக என தெரிந்து கொள்ள பிசிஆர் மற்றும் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
அளவுக்கதிமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதால் அவரது உடல் நலனில் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா? என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தார்களாம். அதில் எதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனினும், அவரிடம் பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக மாதிரிகளை வழங்கவும் அந்த முதியவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எந்த பலனும் கிடைக்காது: இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதிலே அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், அவருக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை. இப்படி 217 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவருக்கு கூடுதலாக வைரஸ்க்கு எதிராக எந்த பலமும் கிடைக்க போவது இல்லை" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications