40 வருடமாக லாட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த ராஜயோகம்! பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கமே வந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அடித்தால் இப்படி தான் லாட்டரி அடிக்க வேண்டும் என்பதுக்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவை சேர்ந்த 60 வயது முதியவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ரூ.51 கோடி பரிசு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்த முதியவருக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்திருப்பது ராஜ யோகம் தான் என பலரும் அவரை பார்த்து பொறாமைப்பட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். இதற்கு எதற்கு பொருந்துதோ இல்லையோ லாட்டரியில் பரிசு அடித்தவர்களுக்கு பொருந்தும் என்று சொல்லலாம். லாட்டரியை வாங்கி பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் அதிகம் என்றாலும் கூட, ஒரு சிலருக்கு திடீரென்று பரிசு அடித்துவிடுகிறது.

old-man-wins-lottery-in-rs-51-crore-prize-after-40-years

கொட்டியது அதிர்ஷ்டம்

யாருக்கு எப்போது அடிக்கும் என்பது தெரியாது என்பதால், என்றாவது ஒருநாள் பரிசு அடித்துவிடாதா என்ற ஏக்கத்தில் லாட்டரி வாங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதிலும் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நினைக்கும் அளவுக்கு சில வினோத சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சிகோகாவில் சுற்றுலா சென்ற ஒருவருக்கு நினைத்து பார்த்திராத ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவில் சில மாகாணங்களில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. வாழ்நாளில் தங்களுக்கு ஒரு நாளாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் பலரும் லாட்டரிகளை வாங்குகிறார்கள். இதில், பலருக்கும் எதுவுமே கிடைப்பது இல்லை. வாங்கிய பணத்தை இழந்து ஏமாந்து போனதுதான் மிச்சம் என்றாலும் ஒரு சிலருக்கு மட்டும் எப்படியோ அதிர்ஷ்டம் அடித்து விடுகிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

40 ஆண்டுகளாக லாட்டரி வாங்கியிருக்கிறார்

அந்த வகையில், தான் மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் 40 வருடங்களாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்து இருக்கிறார். 40 வருடத்தில் ஒருமுறை கூட அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது இல்லை. ஆனாலும் அதீத நம்பிக்கை கொண்ட அவர், வாழ்நாளில் ஒருநாளாவது எனக்கு லாட்டரி அடித்துவிடும் என நினைத்துக்கொண்டு லாட்டரி வாங்கும் பழக்கத்தை கைவிடாமல் இருந்து இருக்கிறார்.

லாட்டரி வாங்கி வீணடிக்கும் பணத்தை சேமித்து வைத்தாலே ஒரு லாட்டரியில் பணம் அடித்தால் என்ன கிடைக்குமோ அது கிடைத்து இருக்கும் என்று நண்பர்கள் சொல்லாத குறைதான். அந்த அளவுக்கு லாட்டரிகளை வாங்கி வந்து இருக்கிறார் அந்த 60 வயது நபர். ஆனால், அவர் எதிபார்த்தது கடைசியாக நடந்தே விட்டது. அண்மையில் தனது மாகாணமான மகோம்ப் கவுண்டில் இந்த ஸ்கார்ட்ச் ஆப் லாட்டரியை வாங்கியிருக்கிறார்.

ஒரு நிமிடம் தலைசுற்றிவிட்டது

வழக்கம் போல இதிலும் பரிசு அடிக்காது என்று நினைத்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அடித்து இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 51 கோடியாகும். இவ்வளவு பெரிய தொகை விழுந்தததும் அவருக்கு தலை சுற்றி மயங்கி விழாத குறைதான். அளவில்லா மகிழ்ச்சி அடைந்த அந்த 60 வயது முதியவர் இது பற்றி கூறியதாவது:-

"40 வருடங்களுக்கும் மேலாக நான் லாட்டரி வாங்கி வருகிறேன். ஸ்க்ராட்ச் டிக்கெட்டை வாங்கி சுரண்டியதும் 6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அடித்தது கண்டுபிடித்தேன். மயக்கமே வந்துவிட்டது போல எனக்கு இருந்தது. ஏதோ கனவில் நடப்பது போல இருந்தது. இன்னும் ஒருமுறை போய் பரிசு எனக்கு தான் விழுந்ததா என டபுள் செக் செய்ய வேண்டும்" என்றார்.

நெட்டிசன்கள் கருத்து

40 வருடங்களாக லாட்டரி வாங்கியவருக்கு கடைசியில் பெரிய தொகையாகத்தான் விழுந்து இருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சில நெட்டிசன்கள் கூறுகையில், "40 வருடங்களாக லாட்டரிக்கு செலவு செய்ததை அவர் சேர்த்து வைத்து இருந்தாலே பெரிய தொகையை மிச்சப்படுத்தியிருக்க முடியும். இவ்வளவு காலம் லாட்டரியில் பணத்தை வீணடித்ததே பெரிய தவறு" என்றும் சிலர் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+