ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு இந்தியர் கைது! அமெரிக்க எல்லையில் விபரீதம்.. குஜராத்திகளே அதிகமாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க எல்லையில் 2025ஆம் ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது பிடிபட்டுள்ளார். டிரம்ப் அரசு கடுமையான குடியேற்ற விதிகளை அமல்படுத்தும் நிலையில், அங்குச் சட்டவிரோதக் குடியேற்றம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரியளவில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

One Indian Caught at US Border Every 20 Minutes in 2025 People from the Gujarat caught the most

எல்லையில் தீவிரமடையும் சோதனை

அதன்படி எல்லையில் குடியேற்ற அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, கடந்த 2025ல் மொத்தம் 23,830 இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஒரு இந்தியர் பிடிபட்டுள்ளார்.

இது 2024ஆம் ஆண்டில் கைது செய்யப்பட 85,119 பேர் என்ற எண்ணிக்கையை விட மிகக் குறைவு. இருந்தபோதிலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களின் முக்கிய நாடுகளில் இந்தியா இன்றும் திகழ்கிறது. பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் நல்ல சம்பளத்திற்காக அமெரிக்கா சென்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கத் துணையில் பெரியவர்கள் துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிர்ச்சி தருவதாகவே உள்ளதாக அமெரிக்க ஏஜெண்டுகள் எச்சரித்துள்ளனர். அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும்போது கைவிடப்பட்ட நிலையில் குழந்தைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

முழுமையாக நிற்கவில்லை

இந்த டேட்டா ஒரு தெளிவான டிரெண்ட்டை காட்டுகின்றன. தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் முயற்சி கணிசமாகக் குறைந்திருந்தாலும் கூட அது முழுமையாக நிற்கவில்லை. முன்பே குறிப்பிட்டது போலப் பலரும் கூடுதல் ஊதியத்திற்காகவே அமெரிக்காவுக்கு இதுபோல சட்டவிரோதமாகச் செல்ல முயல்கிறார்கள். பல புலம்பெயர்ந்தவர்களுக்கு, அமெரிக்காவின் பொருளாதார வளம் என்பது சட்டவிரோதமாகக் குடியேறுவதால் ஏற்படும் அபாயங்களை விட மேலோங்கி நிற்பதாக இருக்கிறது.

காரணம் என்ன

கடந்தாண்டில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் எண்ணிக்கை மிகப் பெரியளவில் குறைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. எல்லையில் தீவிர கண்காணிப்பு, டிரம்ப் அரசின் கொள்கை மாற்றங்கள் மற்றும் குடியேற்றம் துறையின் சோதனை ஆகியவையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று அமெரிக்க எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை ரோந்துகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாலும், அபராதங்களும் கடுமையாகியுள்ளதாலும் ஊடுருவல் முயற்சிகளைக் குறைத்துள்ளன. இருப்பினும், எல்லை தாண்டல் முயற்சிகள் முழுமையாக நிற்கவில்லை.

இது தொடர்பாக அமெரிக்க வல்லுநர்கள் கூறுகையில், "இந்த டேட்டாவை வைத்துப் பார்க்கும்போது ஊடுருவல் குறைந்திருந்தாலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா தரும் பொருளாதார மற்றும் சமூக ஈர்ப்பு இன்னும் வலுவாக இருப்பதால் இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகள் தொடர்கிறது" என்றனர்.

குஜராத்தில் இருந்து செல்வோர் அதிகம்

குஜராத்தில் இருந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்காணிக்கும் இந்திய முகமைகளும் இதே கருத்தைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர். கடுமையான அமெரிக்க விதிகளால் ஊடுருவல் முயற்சிகள் குறைந்திருந்தாலும் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற ஆசை, குறிப்பாகக் குஜராத்திகளிடையே தொடர்ந்து இருப்பதால், இதுபோல சட்டவிரோதமாக நுழையும் முயற்சிகளும் தொடர்கிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய மெக்சிகோ தான் இன்னுமே ஒரு முக்கியமான வழித்தடமாக இருக்கிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் கனடா வழியாக ஆபத்தான முறையில் அமெரிக்காவில் நுழையும் போக்குகளும் அதிகரித்துவிட்டதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+