"ஓடிபோய் திருமணம்.." நிலவில் 3ஆவதாக கால் வைத்த பஸ் ஆல்டரின்.. 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க
வாஷிங்டன்: நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிறகு மூன்றாவதாகக் கால் வைத்த பஸ் ஆல்டரின் இப்போது தனது 93 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வயதில் திருமணம் செய்தாலும் கூட சின்ன வயதில் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் இளசுகளைப் போல உணர்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. அனைத்து துறைகளிலும் எதிர்த் தரப்பை விஞ்சி முன்னணியில் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளும் போட்டியிட்டன.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடையும் வரை இந்த பனிப்போர் தொடங்கியது. இதில் விண்வெளி துறையிலும் கூட அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் தொடர்ந்தே வந்தது.

அமெரிக்கா நாசா
இதில் நிலவுக்கு யார் முதலில் மனிதர்களை அழைத்துச் செல்கிறார்கள் என்பதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விண்வெளி ரேஸில் மற்றவற்றில் ரஷ்யா சாதித்த போதிலும், நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் சென்றதில் அமெரிக்காவே வெற்றி பெற்றது. அமெரிக்காவின் நாசா தான் அப்பல்லோ திட்டம் மூலம் மனிதர்களை முதல்முறையாக நிலவுக்கு அனுப்பியது. இந்த அப்பல்லோ சீரியஸில் பல விண்வெளி வீரர்களை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பியுள்ளது. அதில் 1969ஆம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் மூலம் முதலில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

பஸ் ஆல்டரின்
முதலில் நிலவில் கால் வைத்த நபர் யார் என்றால் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அவருடன் அப்பல்லோ 11 திட்டத்தில் நிலவுக்குச் சென்ற மற்றவர்கள் குறித்து யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1969இல் மனிதர்களை முதலில் நிலவுக்கு அழைத்துச் சென்ற இந்த அப்பல்லோ 11 திட்டத்தில் நிலவில் கால் வைத்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்டரின். இவர் தான் நிலவில் கால் வைத்த மூன்றாவது நபர். 93 வயதான இவர் ஒரு வழியாக இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம்
இது தொடர்பான தகவலை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.. பஸ் ஆல்டரின் தனது 93ஆவது பிறந்தநாளில் தனது நீண்டகால காதலியான டாக்டர் அன்கா ஃபௌர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருவரும் எளிய முறையில் திருணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தின் படங்களைப் பகிர்ந்துள்ள அவர்கள், இந்த வயதில் திருமணம் செய்தாலும் கூட சின்ன வயதில் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களைப் போலவே உணர்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

டிரெண்டிங்
அவரது இந்த ட்வீட் உடனே இணையத்தில் டிரெண்டாகிவிட்டது. பலரும் அந்த புதுமண தம்பதிக்கு வாழத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பஸ் ஆல்டரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பலரும், அவரது திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் கழித்து அமெரிக்கா இப்போது மீண்டும் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதையும் குறிப்பிட்டு பஸ் ஆல்டரினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இவர்
அமெரிக்காவின் முக்கிய விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்டரினுக்கு இதுவரை மூன்று முறை திருமணமாகி விவாகரத்தும் நடந்துள்ளது. மனிதர்களை முதலில் நிலவுக்கு அழைத்துச் சென்ற அப்பல்லோ 11 மிஷனின் மூன்று பேர் கொண்ட குழுவில் இப்போது உயிருடன் இருக்கும் ஒரே நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டுமே.. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் நிலவில் கால் வைத்தார். 1971 இல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 1998இல் விண்வெளி ஆய்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஷேர்ஸ்பேஸை நிறுவினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications