ஒரு ரூபாய்க்கு 12 ஆயிரம் கிடைக்கும்.. ஈரானின் பண மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! தத்தளிக்கும் மக்கள்
வாஷிங்டன்: ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வால் வன்முறை வெடித்துள்ளது. ஈரானில் நடவடிக்கையால் அமெரிக்காவும் 25 சதவீதம் வரி விதிக்கும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரானில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஈரானின் பண மதிப்பும் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்புப்படி ஒரு ரூபாய்க்கு 12,600 ஆக உள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஈரானில் வன்முறை
இதனால், ஈரானில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங் இணைய சேவையையும் முடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஈரான் என்னதான் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் கூட, போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 646-ஆக உயர்ந்துள்ளது.
25% வரி விதிக்கப்படும்
ஈரான் மீது கடும் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தேவைப்பட்டால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்று கூறியுள்ளார். ஈரான் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தும் அதை உடனடியாக அறிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார வீழ்ச்சி
இதனால் ஈரானில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஈரானின் பண மதிப்பும் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. ஏற்கனவே போராட்ட நெருக்கடியில் தவிக்கும் ஈரானுக்கு இது மேலும் தலைவலியை கொடுத்துள்ளது. ஒரே ஒரு அமெரிக்க டாலருக்கு ஈரானில் 1,429,500 ரியால்களை வாங்க முடியும். யூரோவுடன் ஒப்பிட்டால் 1,668,500-ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு 12,600
இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு சுமார் 12,600-ஆக உள்ளது. இவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கும் ஈரானில் தற்போது அடிப்படை தேவைகளுக்கு கூட சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்தே இந்த நெருக்கடி அதிகரித்த நிலையில், தற்போது மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருள்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கோபம் அடைந்த ஈரானிய வர்த்தகர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.












Click it and Unblock the Notifications