ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சிய பிரபல ஆபாச வலைத்தளம்.. உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் தளம் இதுதானாம்!
வாஷிங்டன்: உலகின் அதிக வருமானம் ஈட்டும் தளமாகப் பிரபல ஆபாச தளமான ஒன்லி பேன்ஸ் மாறியுள்ளது. இதில் அந்த நிறுவனம் உலகின் பல டெக் நிறுவனங்களை மிஞ்சியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு ஊழியருக்கு 37.6 மில்லியன் டாலர் வருவாயுடன், உலகின் மிகச் சிறந்த வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒரு நிறுவனம் அதன் ஒவ்வொரு ஊழியருக்கும் எத்தனை வருவாயை ஈட்டுகிறது என்பது குறித்த ரிப்போர்ட்டை பார்சார்ட் என்ற நிறுவனம் வெளியிடும். இதில் ஒரு நிறுவனம் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது என்பதை அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை வைத்து வகுப்பார்கள்.

வருவாய்
அப்போது கிடைக்கும் தொகை தான் ஒரு ஊழியருக்குக் கிடைக்கும் வருவாயாகும். இந்தத் தொகை அதிகமாக இருந்தால் அந்த நிறுவனத்திற்கு வருவாய் அதிகம் எனப் பொருள். அப்படித் தான் இப்போது உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமாக ஒன்லி பேன்ஸ் மாறியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் மொத்தமே 42 ஊழியர்கள் தான் வேலை செய்கிறார்கள். இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 37.6 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. உலகின் வேறு எந்த நிறுவனத்திற்கும் இவ்வளவு வருவாய் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் டாப் நிறுவனங்களான என்விடியா (3.6 மில்லியன் டாலர்) மற்றும் ஆப்பிள் (2.4 மில்லியன் டாலர்) போன்ற பெரிய நிறுவனங்களையும் கூட ஒன்லி பேன்ஸ் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது. 2024 நிதியாண்டில், இந்தத் தளத்திற்கு சுமார் 1.41 பில்லியன் டாலர் நிகர வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் தளத்தில் 46+ லட்சம் கண்டெண்ட் கிரியேட்டர்களும், 377 மில்லியன் யூசர்களும் உள்ளனர்.
எப்படி செயல்படும்
ஒன்லி பேன்ஸ் என்பது ஒரு சந்தா அடிப்படையிலான சமூக வலைத்தளமாக்கும். இதில் ஒருவர் வீடியோ அல்லது போட்டோ பதிவிட்டு அதைப் பார்க்கத் தனியாகப் பயனாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடியும். மாதம் குறிப்பிட்ட தொகை எனச் சந்தா முறை அல்லது ஒவ்வொரு முறையும் பார்க்கத் தனிக் கட்டணம் என கிரியேட்டர்கள் தங்கள் ஸ்டைலுக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிக்கலாம்.
இந்தத் தளம் ஆபாசப் படங்களுக்காக உருவாக்கப்படவில்லை என்றாலும் கூட இப்போது இந்தத் தளத்தில் ஆபாசப் படங்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆபாச நட்சத்திரங்கள் தங்கள் வீடியோக்களை இதில் பதிவிட்டு நேரடியாகச் சந்தாவை வசூலிக்கிறார்கள். அதேநேரம் இதையும் தாண்டி உடற்பயிற்சி, இசை, சமையல் போன்றவற்றுக்கும் கூட கிரியேட்டர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
கமிஷன்
இப்படி மாதச் சந்தா வசூலிப்பதன் மூலம் கிரியேட்டர்களுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கிறது. இதுபோல நெட்டிசன்கள் தனியாக டிப்ஸ் கூட கொடுக்கலாம். இதுபோல வரும் அனைத்து வருவாயிலிருந்தும் 20% ஒன்லி பேன்ஸ் தளத்திற்கு கமிஷனாக போய்விடும். அதுவே இந்தத் தளத்தின் பிரதான வருவாயாக இருக்கிறது.
பின்னணி
கடந்த 2016ல் லண்டனைச் சேர்ந்த டிம் ஸ்டோக்லி என்பவர் இதை தொடங்கினார். முதலில் பல்வேறு தரப்பினரும் இதில் தங்கள் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், காலப்போக்கில் இது ஆபாச படங்களுக்கான தளமாக மாறியது. அதேநேரம் இதன் லாபமும் வருவாயும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. 2021இல் இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை லியோனிட் ராட்வின்ஸ்கி என்பவரது நிறுவனம் வாங்கியது. கடந்த 2024ல் இந்த நிறுவனத்திற்கு வரி எல்லாம் போக 520 மில்லியன் டாலர் லாபம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications