ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அனுப்பிய மெசேஜ்.. ரொம்ப முக்கியம் நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ஆபரேஷனை நடத்தியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் இந்த அதிரடி ஆபரேஷன் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது..

Pakistan India Kahsmir

இந்தியா

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. விசா ரத்து, வான்வெளி மூடல் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதேநேரம் அங்கு இறங்கி அடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆபரேஷன் சிந்தூர்

இதற்கிடையே இந்திய ராணுவம் அதிகாலை 3 மணியளவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரியாக அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

டிரம்ப்

இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீதான தாக்குதல் சீக்கிரம் முடிந்துவிடும் என நினைப்பதாக அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். சமீப காலங்களில் நடப்பத்தை வைத்துப் பார்த்தால் ஏதோ நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தோம் என சொன்ன அவர் இரு நாடுகளும் நீண்ட காலமாகவே மோதிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், "எனக்கு இப்போது தான் தாக்குதல் குறித்துத் தெரிந்தது.. ஓவல் மைதானத்தின் வாசலில் வந்து கொண்டிருந்த போது தான் இது குறித்துக் கேள்விப்பட்டோம். கடந்த காலத்தின் நடந்ததை வைத்துப் பார்த்தாலே ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சீக்கிரம் முடிக்க வேண்டும்

இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. நீங்கள் உண்மையிலேயே யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு இடையே பல, பல ஆண்டுகளாக கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் இருந்து வருகிறது" என்றார். இரு நாடுகளுக்கும் எதாவது சொல்ல விரும்புகிறார்களா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியனர். அதற்கு டிரம்ப், "எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன்" என்று மட்டும் அவர் குறிப்பிட்டார்.

ரொம்ப முக்கியம்

அதிபர் டிரம்பின் இந்த கருத்துகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டால் பல நாடுகள் கண்டனம் தெரிவிக்கும். ஆனால், டிரம்ப் கண்டனம் என்ற வார்த்தையையே பயன்படத்தவில்லை. சீக்கிரம் மோதல் முடிய வேண்டும் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். தனது உரையில் எங்கும் கண்டனம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

அஜித் தோவல்- மார்கோ ரூபியோ

இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோவிடம் விளக்கமளித்துள்ளார். என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+