உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு திட்டமிட்ட ரஷ்யா! புதினை மனம் மாற வைத்த மோடியின் பேச்சு
வாஷிங்டன்: கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாகவும் இந்த நெருக்கடியை தவிர்க்க பிரதமர் மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யாவே எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் போரில் கடும் சவால் கொடுத்தது. இதனால், உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு சரிசமமாக உக்ரைன் மல்லுக்கட்டி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ஒருபக்கம் ரஷ்யா மிரட்டி வருகிறது.
அணு ஆயுத தாக்குதல் நடத்த: இந்த நிலையில், தான் கடந்த 2022- ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிரோஷிமா மீது அணு குண்டு வீசப்பட்ட பிறகு இதுவரை அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனால், கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் சர்வதேச அளவில் கிளம்பியிருக்கிறது.
ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் வலியுறுத்தல் புதினின் மனதை மாற்றியிருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் இது தொடர்பாக பகிர்ந்த தகவலை சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி மற்றும் பிற உலக தலைவர்களின் வலியுறுத்தல் இந்த நெருக்கடியை தவிர்க்க முக்கிய பங்காற்றியதாக கூறியுள்ளார்.
மோடியின் அறிக்கைகள்: புதின் அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால், ரஷ்யா அணு ஆயுதலை கைவிடுவதை உறுதி செய்ய அமெரிக்கா உடனடியாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை நாடியிருக்கிறது. அதன்பிறகு பிரதமர் மோடியின் தொடர்பு மற்றும் அறிக்கைகள் ஆகியவை இந்த நெருக்கடியை தவிர்க்க காரணமாக அமைந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் விவகாரத்தில் இந்தியா, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, அமைதியான தீர்வு அவசியம் என்றும் கூறியது. குறிப்பாக உஸ்பெஸ்கிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, புதினிடம் இந்த யுகம் போருக்கானது இல்லை என்றும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications