”பிளாக் சாபத்" ராக் இசைக்குழுவை சேர்ந்த ஓஸி ஆஸ்பர்ன் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
வாஷிங்டன்: மிகவும் பிரபலமான ஹெவி மெட்டல் இசைக்குழுக்களில் ஒன்றாக உள்ள பிளாக் சாபத் ஆங்கில ராக் இசைக்குழுவில் முன்னணி பாடகராக வலம் வந்த ஓஸி ஆஸ்பர்ன் காலமானார். அவரது மறைவுக்கு ராக் இசை ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல ராக் இசை பாடகரும், மேடை நிகழ்ச்சிகளில் தனது பிரம்மாண்டமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தவருமான ஓஸி ஆஸ்பர்ன் தனது 76 வது வயதில் காலமானார்.

ஆஸ்போர்ன் குடும்பத்தினர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், "எங்கள் அன்புக்குரிய ஓஸி ஆஸ்பர்ன் இன்று காலை காலமான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
சமீபகாலமாக ஓஸி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும், ஓஸி ஆஸ்பர்ன் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கான காரணம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. பிரபல ராக் இசைக்குழுவான பிளாக் சாபத் இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய ஓஸி ஆஸ்பர்ன், ஹெவி மெட்டல் இசைக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தார். "ஐயன் மேன்", "பரானாய்டு", "வார் பிக்ஸ்" போன்ற பல புகழ்பெற்ற பாடல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஓஸி ஆஸ்பர்ன் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் இனிமேல் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்து இருந்தார். ஓஸி ஆஸ்பர்ன் தனது இசை வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இரண்டு முறை UK மியூசிக் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் அமெரிக்க ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் மற்றும் பர்மிங்காமின் பிராட் வீதியில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஐவர் நோவெல்லோ விருது, ஐந்து கிராமி விருதுகள் மற்றும் NME-ன் காட்லைக் ஜீனியஸ் விருது, கிளாசிக் ராக் லிவிங் லெஜண்ட் பரிசு போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். ஓசி ஆஸ்போர்னுக்கு ஷரோன் என்ற மனைவியும், ஏமி, கெல்லி, ஜாக் என மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
முதல் மனைவி தெல்மா ரிலேக்கு ஜெசிகா மற்றும் லூயிஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஓஸி ஆஸ்பர்ன் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications