கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க துணைஅதிபராக பதவியேற்று இருக்கும் கமலா ஹாரீசுக்காக புளியோதரை தயாரித்துள்ளார் பிரபல மாடல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான பத்மலட்சுமி.

இவரின் இந்த வீடியோ டிரெண்டிங்காகி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. ஜனவரி 20 ல் இரட்டை வரலாற்று நிகழ்வை கமலா ஹாரீஸ் நிகழ்த்தி உள்ளார்.

கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் துணை அதிபராக பதவியேற்றது இதுவே முதல் முறையாகும்.

100 ஆண்டுகளில் முதல் முறை

100 ஆண்டுகளில் முதல் முறை

அது மட்டுமல்ல, அமெரிக்கர் அல்லாத பெண் ஒருவர் வெள்ளை மாளிகையின் மிகவும் அதிகாரம் நிறைந்த பதவியில் அமர்வதும் இதே முதல் முறையாகும். அந்த வகையிலும் கமலா ஹாரிஸ் வரலாறு படைத்து விட்டார். இதை நேற்றைய பதவியேற்பு விழாவின்போது அதிபர் பைடனும் கூட மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்குப் பெருமை

தமிழர்களுக்குப் பெருமை

அமெரிக்காவின் துணைஅதிபராக கமலா பதவியேற்றிருப்பது அமெரிக்க பெண்களுக்கு மட்டுல்ல இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை மிகவும் பெருமை கொள்ள செய்துள்ளது. காரணம் அவரது பூர்வீகம் மன்னார்குடியாகும். அவர் தனது தாய் பற்றி கூறுகையில், தனக்கு பிடித்த உணவுகள் குறித்தும் பேசி உள்ளார்.

பிடித்த உணவுகள்

பிடித்த உணவுகள்

கமலா உணவு பற்றி பேசிய வீடியோ காட்சிகளை, பிரபல மாடலான பத்ம லட்சுமி தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழகத்தின் பிரபல உணவான புளியோதரையை தயாரிக்கும் 12 நிமிட வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிடித்த புளியோதரை

பிடித்த புளியோதரை

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மாடல் அழகிதான் பத்மாலட்சுமி. இவருக்கும் தமிழ்நாடுதான் பூர்வீகம் ஆகும். தங்களின் புதிய துணை அதிபரை கவுரவிப்பதற்காக இந்த உணவை தயார் செய்திருப்பதாகவும் பத்மலட்சுமி தெரிவித்துள்ளார்.

பத்மலட்சுமி புளியோதரை

பத்மலட்சுமி புளியோதரை

பத்மலட்சுமி பதிவிட்ட புளியோதரை வீடியோ அதிகமானவர்களால் பகிரப்பட்டுள்ளது. இதனை பாராட்டி மட்டுமல்ல, சுவையாக சமைக்க டிப்ஸ் கொடுக்கச் சொல்லியும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. இன்னும் சிலர் இதற்கு தேவையான பொருட்கள் தங்கள் பகுதியில் எங்கு கிடைக்கும் எனவும் கேட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+