பாகிஸ்தானில் இருந்து சீக்ரெட்டாக வெள்ளை மாளிகைக்கு போன பார்சல்! உற்சாகத்தில் டிரம்ப்.. என்ன மேட்டர்?
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து முதல் பேட்ச் ரேர் எர்த் மெடல்கள் இப்போது அமெரிக்காவுக்குப் போய் இருக்கிறது. இந்தியா உடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுக்கு நெருக்கம் காட்டி வரும் சூழலில் இது நடந்துள்ளது. அமெரிக்கா பாகிஸ்தான் இடைய திடீர் நெருக்கம் ஏற்பட என்ன காரணம்.. இந்த ரேர் எர்த் மெடல்கள் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்த 20+ ஆண்டுகளாகவே சீரான உறவு இருந்து வந்தது. ஆனால், டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்ற பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது. முதலில் இந்தியாவை டிரம்ப் பாராட்டிப் பேசினாலும் கூட திடீரென ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிப்போம் என அறிவித்தார்.

ரேர் எர்த் மெடல்
மறுபுறம் பாகிஸ்தான் உடன் டிரம்ப் நிர்வாகம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் தான் ரேர் எர்த் மெடல் தொடர்பாக இரு நாடுகளும் முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டிருந்தது. இதற்கிடையே இப்போது அமெரிக்காவுக்கு முதல் பேட்ச் ரேர் எர்த் மெடல்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. கடனில் தத்தளிக்கும் பாகிஸ்தானின் கனிம வளங்களை ஆராய்ந்து மேம்படுத்த இது உதவும் என்று தெரிகிறது.
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் ஆண்டிமனி (antimony), செம்பு கன்சன்டிரேட் (copper concentrate) மற்றும் நியோடிமியம், பிரசோடிமியம் போன்ற ரேர் எத்ர் மெடல்கள் இருந்துள்ளன.
திட்டம் என்ன
கடந்த மாதம் தான் அமெரிக்காவின் ஸ்ட்ரேடஜிக் மெட்டல்ஸ் (USSM) நிறுவனம், பாகிஸ்தான் ராணுவத்தின் பொறியியல் பிரிவான ஃபிரண்டியர் ஒர்க்ஸ் ஆர்கனைசேஷன் (FWO) உடன் செப்டம்பரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானில் கனிமங்களை வெட்டி எடுத்துச் சுத்திகரித்து, அதை மேம்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா சுமார் $500 மில்லியன் முதலீடு செய்யும்.
அதற்காக முதற்கட்டமாகவே இப்போது இந்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்தக் கனிம மாதிரிகள், உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டவை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
முக்கிய மைல்கல்
இது குறித்து அமெரிக்காவின் ஸ்ட்ரேடஜிக் மெட்டல்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்த ஏற்றுமதி பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஒரு முக்கிய மைல்கல். பாகிஸ்தானில் இருக்கும் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்து, கனிமங்களை வெட்டி எடுத்து, சுத்திகரிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவோம்" என்றார்.
அதேநேரம் பாகிஸ்தானில் கனிமங்கள் இருப்பதாகத் தகவல் வெளியாவது இது முதல்முறை இல்லை. பாகிஸ்தானின் சுமார் $6 டிரில்லியன் மதிப்பிலான கனிம வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் மாற்றுகிறது. இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கனிம வளங்களைக் கண்டுபிடிக்கத் தவறியதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளன.
காரணம் என்ன
எலக்டிரிக் கார்கள், எலக்டிரிக் பைக் உட்பட நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு ரேர் எர்த் மெடல் தேவைப்படும். இந்த ரேர் எர்த் மெடல் இப்போது முழுக்க முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் வரி என ஆரம்பித்த உடனேயே ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா கெடுபிடி காட்டியது. இதனால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கார் தொழிற்சாலைகள் முடங்கும் ஒரு சூழல் ஏற்பட்டது.
இப்போது நிலைமை ஓரளவுக்குச் சீரானாலும் கூட மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ரேர் எர்த் மெடல்களை வைத்து சீனா இம்சை கொடுக்கலாம். இதன் காரணமாகவே சீனாவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்று அமெரிக்கா இப்போது பாகிஸ்தான் பக்கம் போய் இருக்கிறது.












Click it and Unblock the Notifications